உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 34.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100

இளங்குமரனார் தமிழ்வளம் - 34 ஓ

பெற்று, பெருஞ் சுகத்தையும் பெருங்களிப்பையும் அடைந்து வாழும் பொருட்டு மேற்குறித்த உண்மைக் கடவுள் தாமே திருவுள்ளங் கொண்டு சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய லட்சிய மாகிய உண்மை விளக்கம் செய்கின்ற ஒரு ஞானசபையை இங்கே தமது திருவருட் சம்மதத்தால் இயற்றுவித்து' அருட்பெருஞ் சோதியாக வீற்றிருத்தலை விரித்துரைக்கின்றார். ஒளிபுக இருள் அகல்வதென, உண்மை விளக்கம் உண்டாக உள்ளொளி உண்டாகும் என்பது விளக்கம் தானே!

'மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு

தானம் செய்வாரிற் றலை"

'புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை வாய்மையாற் காணப் படும்'

“எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப் பொய்யா விளக்கே விளக்கு"

என்பவை வாய்மைக் குறள்கள். வள்ளலார் தோற்றுவித்த வாய்மை விளக்கச் சபை, சத்திய ஞான சபை. அச்சபை வழிபாடு ஒளிவழிபாடு அன்றிப் பிறவழிபாடு அன்று. அகந் தூய்மை புறந்தூய்மை அடக்கம் அமைதி இவற்றை மூலப் பொருளாகக் கொண்டே மூலப்பொருளை - முதற் பொருளை- ஒளிவழியால் வழிபடவேண்டும் என வள்ளலார் கண்டார். அதனைப் பிறர் அறிவான் வேண்டி,

ஞானசபை விளக்க விபவ பத்திரிகை'

என்னும் அறிவிக்கையிலே சில குறிப்புகளை உணர்த்துகிறார்.

"இன்று தொடங்கி அருட்பெருஞ்சோதி ஆண்டவரது அருட்பெருஞ்சித்தி வெளிப்படும் வரைக்கும் ஞான சபைக்குள்ளே தகரக் கண்ணாடி விளக்கு வைத்தல் வேண்டும். பித்தளை முதலியவற்றாற் செய்த குத்து விளக்கு வேண்டாம். மேலேற்றுகிற குளோப்பு முதலிய விளக்குகளும் வேண்டாம். தகரக் கண்ணாடி விளக்கு வைக்கும் காலத்தில் தகுதியுள்ள நம்மவர்கள் தேகசுத்தி கரணசுத்தியுடையவர்களாய் திருவாயிற் படிப்புறத்தில் இருந்து கொண்டு விளக்கேற்றி பன்னிரண்டு வயதிற்கு உட்பட்ட சிறுவர் கையிற் கொடுத்தாவது, எழுபத்திரண்டு வயதிற்கு மேற்பட்ட பெரியவர் கையிற் கொடுத்தாவது உட்புற வாயில் களுக்குச் சமீபங்களில் வைத்து வரச் செய்விக்க வேண்டும். நாலு