உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 34.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் வழியில் வள்ளலார்

101

நாளைக்கு ஒரு விசை காலையில் மேற்குறித்த சிறியரைக் கொண்டாயினும் பெரியரைக் கொண்டாயினும் உள்ளே தூசு துடைப்பிக்க வேண்டும். தூசு துடைக்கப் புகும்போது நீராடி சுத்த தேகத்தோடு கால்களில் வத்திரம் சுற்றிக் கொண்டு புகுந்து முட்டிக் காலிட்டுக் கொண்டு தூசு துடைக்கச் செய்விக்க வேண்டும். விளக்கு வைக்கின்ற போதும் இங்ஙனமே செய்விக்க வேண்டும்.

"விளக்கு வைத்தற்கும் தூசு துடைத்தற்கும் தொடங்கு கின்ற பன்னிரண்டு வயதிற்குட்பட்ட சிறுவரும், எழுபத்திரண்டு வயதிற்கு மேற்பட்ட பெரியரும், பொருள் இடம் போகம் முதலியவற்றில் சிறிதும் ச்சை இல்லாதவர்களாய் தெய்வ நினைப்புள்ளவர்களாய் அன்புடையவர்களாய் இருத்தல் வேண்டும்."

CC

'விளக்கு வைக்கும் போதும் தூசு துடைக்கும்போதும் நம்மவர்களில் நேர்ந்தவர்கள் புறத்தில் நின்று பரிசுத்தராய் மெல்லெனத் துதி செய்தல் வேண்டும். யாவரும் யாதொரு காரியம் குறித்தும் தற்காலம் உள்ளே போதல் கூடாது."

'ஞானசபைத் திறவுகோல் ஒருவர் கையிலும் வெளிப்பட ருக்கப்படாது. அத்திறவுகோலை வேறொரு பெட்டிக்குள் வைத்து அப்பெட்டியைப் பூட்டி அப்பெட்டியைப் பொற் சபைக்குள் வைத்து அப்பெட்டித் திறவுகோலை ஆஸ்தானக் காவல் உத்தரவாதியாய் இருக்கின்றவர் கையில் ஒப்புவித்தல் வேண்டும்"

-

இவ்வாறு சபையைப் பேணல் சபையில் வழிபாடு நடத்துதல் ஆகியவை பற்றி வள்ளலார் திட்டவட்டமான காள்கைகளை வகுத்தருளினார்.

“தூஉய்மை என்ப தவாவின்மை மற்றது

வாஅய்மை வேண்ட வரும்'

"ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே பேரா இயற்கை தரும்”

என்னும் குறள்களை எண்ணினால் வள்ளலார் குறிக்கும் அகத்தூய்மை புறத்தூய்மை விளக்கமாம். பன்னீரகவைக்கு உட்பட்டவர், எழுபத் தீரகவைக்கு மேற்பட்டவர் என்பதில் உள்ள குறிப்பு இயற்கையின் ஆழத்தை உணர்ந்து கூறியதாம். கரவிலா இளமைப் பருவம் முன்னது; மூதிளமை அருணிலைப்