உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 34.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136

இளங்குமரனார் தமிழ்வளம்

34 ஓ

அடியன் ஆக்கிப் பிள்ளை ஆக்கி நேயன் ஆக்கியே அடிகள் ஆக்கிக் கொண்டாய்" (5035)

“அன்றே என்னை அடியன் ஆக்கி ஆண்ட சோதியே

அதன்பின் பிள்ளை ஆக்கி அருள் இங்களித்த சோதியே

நன்றே மீட்டும் நேயன் ஆக்கி நயந்த சோதியே

நானும் நீயும் ஒன்றென் றுரைத்து நல்கு சோதியே" (5059)

அடியன், பிள்ளை, நேயன் என்னும் மும்மைப் பேறும் தன்னொடு தானாம் பேறும் வழங்கியமையை உரைக்கிறார். இந்த வார்த்தை என் வார்த்தை அன்று : திருச்சிற்றம்பல முடையார் செல்வப் பிள்ளை வார்த்தை என்றும் திருமுகம் ஒன்றில் குறிப்பிடுகிறார், இந்நிலையில் தம் உரை, தம் உரை அன்று என்றும், இறைவன் உரையே தம் உரையாக வெளிப்படுகின்றது என்றும் வள்ளலார் உணர்ந்தார்.

"நான் உரைக்கும் வார்த்தை எல்லாம் நாயகன் சொல் வார்த்தை அன்றி

நான் உரைக்கும் வார்த்தை அன்று” (5504)

“நான் உரைக்கும் வார்த்தையெலாம் நாயகன் தன் வார்த்தை

நம்புமினோ நமரங்காள்” (5594)

றையைப், "புணர்ந்து கலந்து ஒன்றாகிப் பொருந்துதல் வேண்டும்" என்னும், இளமை தொட்ட வள்ளலார் வேட்கை, படிப்படியே நிறைவேறிவரும் செய்திகளே இவையாம்.

தடை :

இறையோடு ஒன்றுதற்குத் தடையாக இருப்பவை எவை என்பவற்றை எண்ணுகிறார் வள்ளலார், அத்தடைகள் செயற்கை யாகவும் போலிமையாகவும் வஞ்சமாகவும் கயமையாகவும் இருப்பதைத் தேர்ந்து தெளிந்து அறிகிறார், அவற்றை அகற்றும் வாழ்வை உறுதியாகக் கொள்கிறார். அவ்வாறே பிறரும் கொண்டு உய்வு பெற வேண்டுமென்று பல்கால் எடுத்தெடுத்து உரைக்கிறார். தாம் வெற்றி கொண்டதை உரைத்து, அவ்வாறே பிறரும் வெற்றி கொள்ள இயலுமென்பதை விரித்து உரைக்கிறார்,

“பன்னெறிச் சமயங்கள் மதங்கள் என்றிடும் ஓர் பவநெறி” (3696) பவம் = பாவம்.