உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 34.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளலார் கண்ட சாகாக்கலை

“கூறுகின்ற சமயம் எலாம் மதங்கள் எலாம் பிடித்துக் கூவுகின்றார் பலன்ஒன்றும் கொண்டறியார் வீணே நீறுகின்றார் மண்ணாகி நாறுகின்றார் அவர்போல்

நீடுலகில் அழிந்துவிட நினைத்தேனோ நிலைமேல் ஏறுகின்ற திறம் விழைந்தேன் ஏற்றுவித்தாய்” (3766) “வேதநெறி ஆகமத்தின் நெறிபவரா ணங்கள்

விளம்பு நெறி இதிகாசம் விதித்தநெறி முழுதும் ஓதுகின்ற சூதனைத்தும் உளவனைத்தும் காட்டி

உள்ளதனை உள்ளபடி உணரஉரைத் தனையே" (3787) 'கலையுரைத்த கற்பனையே நிலையெனக் கொண்டாடும் கண்மூடி வழக்கமெலாம் மண்மூடிப் போக” (3768)

“சாதியும் மதமும் சமயமும் தவிர்ந்தேன்

சாத்திரக் குப்பையும் தணந்தேன்" (4075)

“இச்சாதி சமயவிகற் பங்களெலாம் தவிர்த்தே

எவ்வுலகும் சன்மார்க்கப் பொதுவடைதல் வேண்டும்" (4086)

"நால்வருணம் ஆசிரமம் ஆசாரம் முதலா

நவின்றகலைச் சரிதம்எலாம் பிள்ளைவிளை யாட்டே மேல்வருணம் தோல்வருணம் கண்டறிவார் இலைநீ

விழித்திதுபார் என்றெனக்கு விளம்பியசற் குருவே" (4174)

"இயல்வேதா கமங்கள் புராணங்கள் இதிகாசம்

இவைமுதலா இந்திரசா லங்கடையா உரைப்பார்

மயல் ஒரு நூல் மாத்திரம்தான் சாலம்என அறிந்தார் மகனே நீ நூல் அனைத்தும் சாலமென அறிக” (4176)

“மதித்த சமயமத வழக்கெல்லா மாய்ந்தது

66

வருணாச் சிரமம்எனு மயக்கமும் சாய்ந்தது” (4503)

"குறித்த வேதாகமக் கூச்சலும் அடங்கிற்று (4504)

சாதிமதம் சமயமுதற் சங்கற்ப விகற்பம்எலாம்

தவிர்ந்து போக” (4508)

"இந்தச் சாதி இந்த மதம் எனும்வாய்ச் சழக்கை எலாம் தவிர்த்த சத்தியனே” (4637)

137