உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 34.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184

சொல்லாட்சி :

இளங்குமரனார் தமிழ்வளம் - 34 ஓ

கொடைமடம் என்னும் சொல்லாட்சி, புறநானூற்றுப் பயிற்சி இலார்க்கு எய்துமோ?

துச்சில் என்னும் சொல்லாட்சி, திருக்குறள் தேர்ச்சி இலார்க்கு எய்துமோ?

நெடுமொழி வஞ்சித் துறை, புறப்பொருள் இலக்கணக் கல்வி இலார்க்குக் கைவருமோ?

வழிமொழி என்னும் ஆட்சி ஆளுடைய பிள்ளையாரும், பழமொழிமேல் வைப்பு என்னும் ஆட்சி ஆளுடைய அடிகளாரும் வழங்கிய கொடைகள் அல்லவோ!

குருவர் :

ஆளுடைய பிள்ளையார் தம் வாக்கால் உயிர் அனுபவம், அருள் அனுபவம், சிவ அனுபவம் கற்பித்ததையும், திருநெறித் தமிழ் கொண்டு ஐயம்; நீத்தருளியதையும், கற்பம் பல முயன்றாலும் வரலரும் திறனெலாம் ஒருபகற்பொழுதில் உற அளித்ததையும் சுட்டுகிறார்.

"ஒண்ணுளே ஒன்பதுவாய் வைத்தாய்” என்னும் கருத்தால் தம்மை ஆட்கொண்ட ஆளுடைய அரசைப் பாராட்டுகிறார்.

"ஏழிசையாய் இசைப்பயனாய் இன்னமுதாய் என்னுடைய தோழனுமாய்" என்னும் அருமைப் பாடலால் தம் கரணம் கரைந்து கரைந்து உருகுதலைச் சுட்டுகிறார்! அப்பாடல் ஆளுடைய நம்பிகள் பாடல். ஒன்றைக்கற்பார் கற்க வேண்டும் வகையை ஆளுடைய நம்பிகள் பாடலைக் கற்ற வகையால் வள்ளலார் உணர்த்துகிறார்.

தேன்படிக்கும் அமுதாம்உன் திருப்பாட்டைத் தினந்தோறும் நான்படிக்கும் போதென்னை நானறியேன் நாவொன்றோ

ஊன்படிக்கும் உளம்படிக்கும் உயிர்படிக்கும் உயிர்க்குயிரும் தான்படிக்கும் அனுபவம்காண் தனிக்கருணைப் பெருந்தகையே!

என்பது அப்பாட்டு.

சுந்தரர் பாடற் சுவை, தேனும் அமுதும்,மேலும் தாம்

இனிக்க விரும்பும் சுவை.