உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 34.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளலார் கண்ட சாகாக்கலை

185

சுந்தரர் பாட்டை விடாது ஓதியமையை விளக்குவது, தினந்தோறும் என்பது.

படிப்பின் இலக்கணம், நான் படிக்கும்போது என்னை நான் அறியேன் என்பது.

நாப்பாடம் மட்டுமன்று தாம்படித்த பாடம், ஊன்படிக்க, உளம்படிக்க, உயிர்படிக்க உயிர்க்கு உயிரும் படிக்க-படித்த படிப்பு!

வெறுஞ்சொல் அன்று - அனுபவம்!

சான்று எவர்? தனிக்கருணைப் பெருந்தகையாம் இறை! இவரா படியாதவர்?

படிப்பின் இலக்கணமே, படிப்பார்க்கு உணர்த்திய படிப்பாளியா படியாதவர்?

ஆளுடைய அடிகள் வாசகப் பாடலில் வள்ளலார் எப்படித் தோய்கிறார்?

சேமமிகும் திருவாத வூர்த்தேவென் றுலகு புகழ் மாமணியே நீஉரைத்த வாசகத்தை எண்ணுதொறும் காமமிகு காதலன்தன் கலவிதனைக் கருதுகின்ற ஏமமுறு கற்புடையாள் இன்பினும்இன் பெய்துவதே.

வான்கலந்த மாணிக்க வாசகநின் வாசகத்தை நான் கலந்து பாடுங்கால் நற்கருப்பஞ் சாற்றினிலே தேன்கலந்து பால்கலந்து செழுங்கனித்தீஞ் சுவைகலந்து ஊன் கலந்து உயிர்கலந்து உவட்டாமல் இனிப்பதுவே.

வருமொழிசெய் மாணிக்க வாசகநின் வாசகத்தில் ஒருமொழியே என்னையும் என்உடையனையும் ஒன்றுவித்துத் தருமொழியாம் என்னிலினிச் சாதகமேன் சஞ்சலமேன் குருமொழியை விரும்பிஅயல் கூடுவதேன் கூறுதியே.

வாட்டமிலா மாணிக்க வாசகநின் வாசகத்தைக் கேட்டபொழு தங்கிருந்த கீழ்பறவைச் சாதிகளும் வேட்டமுறும்; பொல்லா விலங்குகளும் மெய்ஞ்ஞான நாட்டமுறும்; என்னிலிங்கு, நானடைதல் வியப்பன்றே