உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 34.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளலார் கண்ட சாகாக்கலை

227

ஒருவர், சன்மார்க்க நெறியைக் கூர்ந்துணர்ந்தார் எனின், அவர் நாத்திகக் கொள்கையை நாடியே இரார் என்பது, வள்ளலார் கொள்கையைத் தாங்கிப் பிடித்த தந்தை பெரியார் செயலால் நன்கு விளக்கம் பெறுதல் அறியலாம். சன்மார்க்கக் கொள்கைகள் திருவருட்பாவில் இடம் பெற்றவைபற்றி எண்ணினோம். விளக்கமும் கண்டோம். இனி உரைநடை வழியே வள்ளலார் வெளிப்படுத்திய விரிபொருள் விளக்கங்களைக் காணலாம்.

உரைநடையில் வள்ளலார் எழுதிய சன்மார்க்க விளக்கம் இருவகைப்படும். ஒன்று : சீவகாருணிய ஒழுக்கம் மற்றொன்று,

சன்மார்க்க விண்ணப்பங்கள்.

இவற்றுள் முன்னது, முப்பிரிவுகளைக் கொண்டது. பின்னது நான்கு விண்ணப்பங்களைக் கொண்டது.

ஜீவகாருண்ய ஒழுக்கம் - முதற்பிரிவு

ஜீவகாருண்ய ஒழுக்கமே (உயிரிரக்க கடைப்பிடியே) கடவுள் வழிபாடு என்பதை விளக்குவது இது.

"சீவகாருணிய ஒழுக்கம் என்பது என்னெனில் : சீவர் களுக்குச் சீவர்கள் விஷயமாக உண்டாகின்ற ஆன்ம உருக்கத்தைக் கொண்டு, தெய்வ வழிபாடு செய்து வாழ்தல் "என்றறிய வேண்டும்".

"சீவர்கள் விஷயமாக ஆன்ம உருக்கம் எப்போது உண்டாகும் என்னில், சீவர்கள் பசி, தாகம், பிணி, இச்சை, எளிமை, பயம், கொலை இவைகளால் துக்கத்தை அநுபவிக்கக் கண்டபோதாயினும், கேட்டபோதாயினும், இவ்வாறு உண்டாகுமென்று அறிந்த போதாயினும் ஆன்ம உருக்கம் உண்டாகு மென்றறியல் வேண்டும்" என்றார்.

மேலும் சீவனின்மேல் சீவனுக்கு உண்டாகும் ஆன்ம உருக்கம் பழைய ஆன்ம உரிமை என்கிறார்; அது:

சீவர்க்கள் எல்லாம் ஒரு தன்மையாகிய இயற்கையுண்மை ஏகதேசங்களாய்ச் சர்வ சக்தியுடைய கடவுளால் சிருஷ்டிக்கப் பட்ட படியால், ஒருமையுள்ள சகோதரர்களே யாவர். சகோதரர்களுள் ஒருவர் ஒரு ஆபத்தால் துக்கப்படுகின்ற போதும், துக்கப் படுவாரென்றறிந்த போதும் அவரைத் தமது சகோதரரென்று கண்ட மற்றொரு சகோதரருக்கு உருக்கம்