உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 34.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10

வாழ்வியல் வழி

இளங்குமரனார் தமிழ்வளம் - 34

வள்ளுவர் வாய்மொழியாம் திருக்குறள், வள்ளலார் வாழ்வியல் வளத்திற்கு மிக மிக ஏற்றதாக அமைந்துள்ளமை, இருவர் கருத்துகளையும் அறிவார் எவரும் மேலோட்டமாகவே காணக் கூடிய செய்தி.

“பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்”

என்னும் குறளின் விளக்கமே வள்ளலார் தொண்டு. அருளுடைமை அதிகாரத்திற்கு முழுமையாக வாய்த்த உயிரோவியம் வள்ளலார் திருவாழ்வு. அருளுடைமையின் விளக்கவுரை, 'சீவகாருணிய ஒழுக்கம்' என்னும் நூலும், அதன் தொடர்பான அறிக்கைகள் கடிதங்கள் ஆயனவும். மெய்யுணர்தல், தவம், ஒப்புரவு என்பன வற்றுக்கு நடைமுறைச் சான்று வள்ளலாரினும் வேறொரு வரைத் தேட வேண்டியதில்லை.

திருக்குறள் மாட்சி

வள்ளுவர் காலத்திற்குப் பின்வந்த எப்புலவரும் தாம் இயற்றிய நூலில் திருக்குறளை எடுத்தாளாமல் விடுத்தது இல்லை. "முன்னோர் மொழி பொருளே யன்றி அவர் மொழியும் பொன்னேபோல் போற்றுதல் என்பதற்குத் திருக்குறளைக் காட்டிலும் ஒரு நூலைத் தமிழ்ப் பரப்பில் சொல்லுமாறு இல்லை.

திருக்குறளுக்கு உரைகண்டோர் பதின்மர் என எண்ணப் பட்டாலும், அவருக்குப் பின்னர் இதுகாறும் உரைகண்டவரை எண்ணினால் அவரிற் பன்மடங்காக உளர். தத்தம் மொழிகளில் திருக்குறளை மொழி பெயர்த்துக் கொண்ட பெருமக்களோ ஒரு நூற்றுவர்க்கு மேலும் உளர்.

திருக்குறள் இல்லா நூலகம் இல்லை. திருக்குறளை மேற்கோள் காட்டிப் பேசாத மேடை இல்லை; எண்கவனகம் (அட்டாவதானம்), பதின்கவனகம் (தசாவதானம்) குழந்தையர் திறத்திலும் கொஞ்சி மகிழ வாய்த்தது திருக்குறள்.

எனக்

திருக்குறள் வகுப்பு, திருக்குறள் முற்றோதல், திருக்குறள் வழித் திருமணம், திருக்குறள் வழிபாடு எனப் புகழுற்று வருவரும் திருக்குறள். பேருந்துகளில் உலாக் உலாக் கொண்டு வருவதும் திருக்குறள். திருக்குறள் பெயராலும், வள்ளுவர் பெயராலும் உள்ள அமைப்புகளை எண்ணி எழுதிப் 'பட்டியல் இட்டால்' ஒரு பெரு நூலாம் அளவு விரிவுடையதாம். இவ்வெல்லா