உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 34.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் வழியில் வள்ளலார்

13

என்பது அக்குறள். வள்ளன்மைக்கு அடிப்படை உள்ளம்; அவ் வுள்ளம் இல்லாதவர் வள்ளல் தன்மையர் என்னும் பெருமையை அடையார் என்பது இதன்பொருள். இதனை நேர்நிலையில் எப்படிக் காணலாம்.

“உள்ளம் உடையவர் கொள்வார் உலகத்து வள்ளியம் என்னும் செருக்கு”

எனின், வள்ளியர் தம் நேர் நிலை தெளிவாகிவிடுகின்றது!

“உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை, நில்லாது நீங்கி விடும்"

என்றும் திருக்குறள் கூறுகின்றதே!

உள்ளம் உடையவர் வள்ளலார் என்பதற்குச் சான்று வேண்டுமா? இச்சான்று இல்லாதது என அவர் படைப்பில் ஒன்று உண்டா? அவர் வாழ்வில்தான் ஒன்று உண்டா?

வள்ளலார், வள்ளுவர் வாய்மொழியில் தோய்ந்து தோய்ந்து திளைத்தவர் என்பதற்குப் பல கூறலென்? "நெஞ்சறிவுறுத்தல்" ஒன்று போதும் என அமைவோம்! அதன் விளக்கம் "வள்ளலார் பாடல்களும் திருக்குறளும்" என்னும் பகுதியில் (4) காணலாம். நூற்பகுப்பு

வள்ளுவர் வழியில் வள்ளலார் திகழ்ந்தார் என்பதை வள்ளலார் கடிதம், உரைநடை, பாடல், வாழ்வு, நிறுவனம் என்னும் ஐங்கூறுகளொடு நாம் முறையே காணலாம்.