உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 34.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. வள்ளலார் கடிதங்களும் திருக்குறளும்

வள்ளலார் கடிதங்களுள் இறுக்கம் இரத்தின முதலியார்க்கு வரைந்தவை முதன்மையானவை. அவற்றுள் 37 கடிதங்கள் கிடைக்கப் பெற்று அவற்றைத் திரு. ஆ. பாலகிருட்டிண பிள்ளை திருவருட்பா ஐந்தாம் புத்தகமாகிய திருமுகப் பகுதியில் ணைத்துள்ளார்.

கல்வி கற்பிக்கும் முறை

இரத்தினர் கடிதங்களுள் முதல் இரண்டு கடிதங்களில் படிக்க விரும்பும் விருப்பமுடைய வறிய மாணவர்க்கு உதவுமாறு வள்ளலார் வேண்டியுள்ளார். கல்வித் தொண்டில் அடிகளார்

காண்டிருந்த ஆர்வச் சான்றுகளாக அக்குறிப்புகள் உள்ளன. வாழும் உயிர்க்குக் கண், கருவியே என்பதைத் தேர்ந்த வள்ளலார், அக்கல்வியைக் கற்பிக்கும் முறைமையை அக்கடிதங் களில் தெளிவாக்குகிறார்.

"இந்தக் கடிதம் கொண்டு வருகிற சி. குமாரசாமி பிள்ளை படிக்கவேண்டும் என்று விரும்பியிருக்கிறபடியால் அவனுக்கு எந்தவிதத்தில் படிப்பித்தால் படிப்பு வருமோ வருமோ அந்த விதத்தில் படிப்பிக்கவேண்டும்" என்பது இரண்டாம் கடிதக் குறிப்பு.

"கேட்பார் எளிமையாக அறிந்து கொள்ளும் வண்ணம் எடுத்துச் சொல்லும் சொல்வன்மை வேண்டும்" என்பது திருக்குறள். இதனை 'எண்பொருளவாகச் செலச் சொல்லல்" என்று திருக்குறள் கூறும்.

செயன் முறை

இவ்விரண்டாம் கடிதம் சார்ந்த கடிதத்தில், "சிரஞ்சீவி குமாரசாமி அவ்விடம் வருகிற படியால் அவனுக்குப் படிப்பும் முயற்சியும் ஊதியமும் உண்டாகின்ற வகை எவ்வகை -அவ்வகை ஆராய்ந்து கூட்டவேண்டும்" என்கிறார். இது திருக்குறள் தெரிந்து செயல்வகை அதிகாரத்தில் வரும்,