உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 34.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் வழியில் வள்ளலார்

“தெரிந்த இனத்தோடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்கு அரும்பொருள் யாதொன்றும் இல்

என்னும் குறளின் உள்ளடக்கப் பொருளாகும்.

இல்லறத்தார் இயல்

15

இக்கடிதத்திலேயே இல்லற வாழ்வினர்க்கு வேண்டும் இன்றியமையாப் பண்புகள் இவையெனச் சுட்டியுள்ளார்

வள்ளலார்.

'பழமை பாராட்டலும், கண்ணோட்டம் செய்தலும், சுற்றம் தழுவலும் அவசியம் சமுசாரிக்கு வேண்டும்” என்னும் இது, பழைமை (81), கண்ணோட்டம் (58), சுற்றந் தழாஅல் (53) என்னும் திருக்குறள் அதிகாரத் தலைப்புகளாதல் அறியத் தக்கது. தினையும் பனையும்

"வருத்தம் பாராது வரவிடுத்த ஒரு பீசும் ஒன்பது லக்ஷ்ம் பீசுகளாகக் கொண்டேன்; இதுவே அமையும் இனி வருத்தம் எடுத்துக் கொள்ள வேண்டாம்" என இரத்தினர்க்கு எழுதிய ஆறாங் கடிதத்தில் குறிப்பிடுகிறார் வள்ளலார்.

சிறு நன்றியையும் மிகப் பெரிதாக எடுத்துக் கொள்ளும் வள்ளலார் பேருள்ளம் இவ் வெழுத்துகளால் புலப்படும். இது, “தினைத்துணை நன்றிசெயினும் பனைத் துணையாக் கொள்வர் பயன்தெரி வார்”

என்னும் குறளுக்கு வாய்த்த எடுத்துக்காட்டாம். கடன்கொண்டும் கடன் செய்தல்

"இந்தக் கடிதம் கொண்டு வருகிற அம்மாளுக்குத் தாங்கள் கடன் வாங்குகிற இடத்தில் இரண்டு வராகன் கடன் வாங்கிக் கொடுக்க வேண்டும்" என்றும், "இந்தக் கடிதம் கொண்டு வருகின்றவர்கள் இவ்விடத்தில் வந்து தேகமெலிவைக் காட்டிய படியால் இதே சமயத்தில் இவ்விடத்தில் எனக்கு வழக்கமாகக் கடன் கொடுக்கிறவர்கள் சமீபத்தில் இல்லை. இவர்கள் தேக பக்குவ நிமித்தம்... தங்களுக்கு இந்தப் பிரயாசம் வைத்தேன்” என்றும், பதினைந்தாம் கடிதத்தில் எழுதுகின்றார் வள்ளலார். இவ்வாறே பிறர் துயர் தீர்க்கும் பேரிரக்கப் பெருங்குணத்தால் வள்ளலார் செய்த உதவிகள் பல. இவை தம் வளப் பெருக்கால் செய்தவையா? உளப்பெருக்கால் செய்தவையா?