உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 34.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16

இளங்குமரனார் தமிழ்வளம் - 34

“இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார் கடனறி காட்சி யவர்”

என்னும் திருக்குறளுக்குச் சான்றாகத் திகழ்ந்தவர் வள்ளலார் என்பது இவற்றால் விளங்கும்.

பழமையும் நாகரிகமும்

புதுவை வேலு முதலியார் என்பார் வள்ளலார் மேல் பேரன்புடையவர். அவர் தக்க ஒருவர் வழியாக வள்ளலார்க்குப் பணம் விடுத்து வைத்தார். அப்பண வரவறிந்த வள்ளலார் மகிழ்ந்தாரா?

து

"ஐயா, நானோ புத்தி தெரிந்த நாள் தொடங்கி இது பரியந்தமும் இந்தப் பிணபுடம்வும் இதற்குக் கொடுக்கின்ற பிண்ட துண்டங்களும் (சோறும் கறியும் பெருஞ்சுமையாக இருக்கின்றதே! ஐயோ! இது என்றைக்குத் தொலையும் என்று எண்ணி இளைத்துத் துன்பப் படுகின்றவனாக இருக்கிறேன். இப்படிப்பட்ட இந்த நாய்க்குப் பணம் என்ன செய்ய! ஐயா! என்னைக் குறித்துத் தாங்கள் பண விஷயத்தில் பிரயாச மெடுத்துக் கொள்ள வேண்டாம். தாங்கள் வேறு விதத்திலும் செலவுக்கு இடம் பார்க்க வேண்டாம் என மறுத்து எழுதுகிறார்.

உள்ளார்ந்த அன்பால் உதவும் பொருளையும் வள்ளலார் ஏற்க விரும்பினார் அல்லர். நைந்தும் நொந்தும் வலுக்கட்டாயமாக ஒதுக்குகிறார். தொகையை அன்றி வேறு வகையால் உதவு தலையும் வேண்டாவென விலக்குகிறார். வள்ளலார் வளவாழ்வுச் செருக்கா இப்படித் தடுக்கின்றது? இல்லை இல்லை! அவர்தம் தனிப் பெருஞ் சால்பே தடுக்கின்றது. இதனைத் திருக்குறள்,

"இடமெல்லாம் கொள்ளாத் தகைத்தே இடமில்லாக் காலும் இரவொல்லாச் சால்பு”

என்கிறது.

இங்கே இரத்தல் என்பதற்கே இடமில்லை. "கொள்ளெனக் கொடுத்த கொடையையும் கொள்ளேன்” என்னும் முந்தையர் குறிக்கோள் வாழ்வே பளிச்சிடுகின்றதாம்.

'வேண்டா' என வள்ளலார் மறுப்பினும் புதுவை வேலர் அமைந்தாரல்லர். இன்னோர் அன்பர் வழியே மீள் முயற்சி மேற்கொண்டார்.