உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 34.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் வழியில் வள்ளலார்

17

"தாங்கள் மார்கழி மாதம் ம.ள.ள. ஸ்ரீ முதலியார் நற்குண மணியாகிய சீனுவாச முதலியார்க்கு எழுதிய கடிதத்தால் அவர்கள் என்னைக் கேட்க, நான் மறுக்க, மறித்தும் தங்கள் கடிதம் வர, இதனால் தங்கள் மனத்திற்கு வருத்தம் உண்டாம் என்று மேற்படி முதலியார் அவர்களிடத்தில் பத்து ரூபாய் வாங்கிக் கொண்டேன். மற்றவை அவர்களிடத்திற்றானே யிருக்கிறது. இதனைத் தாங்கள் அறிய வேண்டும்" என்னும் கடிதப் பகுதியால் பின் நிகழ்ந்த நிகழ்வுகள் வெளிப்படும்.

தான்

தம் அன்பர் மனத்திற்கு வருத்தம் உண்டாகும் என்பதால் அடையாளத்திற்காக ஒரு தொகையை எடுத்துக் காண்டுள்ளார் என்பது விளங்குகின்றது. வள்ளலார் பரிவு இஃதென விளக்கும் சான்றாவதன்றிப், பணப் பற்றைச் சிறிதும் காட்டிற்றில்லையாம். அன்றியும் வள்ளலார் 'பழமை பாராட்டும் பண்புக்கு' முத்திரையாகவும் திகழ்கின்றதாம்.

“பழமை எனப்படுவ தியாதெனின் யாதும் கிழமையைக் கீழ்ந்திடா நட்பு”

என்பது பழமை பாராட்டும் திருக்குறள்.

கொடைஞர் மனம் நோமே எனத் தம் பேரிரக்கத்தால், பெறக் கூடாததைப் பெறுவார் போலப் பெற்றமை,

“பெயர்கண்டும் நஞ்சுண்டமைவர் நயத்தக்க நாகரிகம் வேண்டு பவர்'

என்னும் குறளில் வரும் நயத்தக்க நாகரிகம் போற்றுதல் ஆம். இவண் நஞ்சுண்ணல், விரும்பாத ஒன்றையும் தருவார் முகம் வாடாமைக்காக ஏற்றுக் கொள்ளும் தகவு குறிப்பதென்க. பழியஞ்சல்

பழிச் சொல்லுக்கு வள்ளலார் நாணுதல், இறுக்கத்தார் கடிதத்தில் இடம் பெறும் ஒரு நிகழ்ச்சியால் புலப்படுகின்றது.

"நான் புரட்டாசி மாதம் அவ்விடம் பிரயாணப்பட்டு வருவதாக ஓர் காரியம் பற்றி நிச்சயித்திருந்தேன். அந்த நிச்சயத்துக்கு ஓர் தடை நேரிட்டது. என்னெனில் நான் புசித்து வருகின்ற கிரகத்தில் யோக்கியராகவும் தலைவராகவும் இருந்த ரெட்டியார் நாளது மாதம் 20ம் தேதி பதவியடைந்தார். ஆதலால் உடனே வருவது ஓர் வகை நிந்தைக்கு இடமாக இருக்கின்றது" என்று எழுதுகிறார்.