உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 34.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18

இளங்குமரனார் தமிழ்வளம் - 34 ஓ

இவ்வாறே புதுவை வேலு முதலியார்க்கு எழுதிய கடிதம் ஒன்றிலும் (4) "நான் பொசிக்கின்ற ரெட்டியார் வீட்டில் தற்காலத்தில் எசமானராக இருக்கிற ராமகிருஷ்ண ரெட்டியார் என்பவர்க்கு சுமார் 4 மாசந் தொடங்கி உஷ்ண பேதியாகிக் கொண்டிருந்தது. மத்தியில் மத்தியில் நிற்பதும் பேதியாவதுமாக இருந்தது. இப்பொழுது சுமார் இருபது தினமாக வரை கடந்த பேதியாகி எழுந்திருக்க மாட்டாமல் மலசலம் படுக்கையில் தான் விடும்படியான அவ்வளவு அசத்தியும் மெலிவுமாக இருப்பது. சுமார் எட்டு தினத்திற்கு முன் போய் விட்டதென்று கைவிட்டு விட்டார்கள். பின்பு சிவானுக்கிரகத்தால் அணுமாத்திரம் சௌக்கியம்போல் தோற்றுகின்றது. இப்படிப்பட்ட வேளையில் நான் புறப்பட்டு வந்தால் உலகம் நிந்திக்கும். கடவுளுக்கும் சம்மதமிராது. ஆனபடியால் அஞ்சுகிறேன். என்ன செய்வேன்” எனத் தவிப்பாக எழுதுகின்றார். இவை,

“தினைத்துணையாம் குற்றம் வரினும் பனைத்துணையாக் கொள்வார் பழிநாணு வார்"

"குற்றமே காக்க பொருளாகக் குற்றமே அற்றம் தரூஉம் பகை'

99

என்னும் குற்றங்கடிதல் குறள்களுக்கு விளக்கமாக இருத்தல் தெளிவாம். பழிக்கு நாணும் பான்மையர், தினையளவு குற்றத்தையும் பனையளவாகக் கொண்டு நாணமடைவர் என்பதும், "குற்றமே அழிவைத் தரும் பகை; ஆதலால் குற்றம் செய்யாமையையே உயர் பொருளாகக் கொள்க" என்பதும் இக்குறள்களின் கருத்தாம்.

நல்லோர் வறுமை

உயிர்ப் பேரிரக்க உருவராகிய வள்ளலார், மருத்துவத் தேர்ச்சியும் மிக்கவர்; மருந்து செய்யவும் வல்லவர். பிறர்க்கென வாழ்ந்த அப்பெருந்தகை, ஓர் அரிய மருந்து செய்து வைத்திருக்க அம்மருந்து பதனழிந்து பயன்படாது போனது குறித்து வருந்தி எழுதுகிறார் இறுக்கம் இரத்தினர்க்கு:

"ஈராண்டு பலவகைக் கருவிகளால் பதப்படுத்தி ஏழைகள் பலர்க்கும் உபயோகிக்கும் பொருட்டு நம்மாட்டிருந்த ஓர் பேருழைப்பு ஓர் அசாக்கிரதையால் தன்மை கெடப் பெற்றது.

ங்ஙனம் பெறினும் நம் பெருமான் திருவுளக் குறிப்பு அங்ஙனம் இருந்ததென்று கருதி அமைதி பெற்றாமாயினும் பிணிகளாற்