உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 34.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் வழியில் வள்ளலார்

19

பிணிப்புண்ட ஏழைகளைக் கருதும்போதெல்லாம் ஒரு சிறிது உளம் புடைபெயர்கின்றாம்.'

உயிர்தான் உயிர் இரக்கந்தான் என ரண்டலாது ஒன்றேயாய வள்ளலார் தம் பொருட்டாகவோ அரிய மருந்து பாழ்பட்டதற்கு வருந்துகின்றார்? "அப்பேருழைப்பு ஏழையர்க்குப் பயன்படாது ஒழிந்ததே" என்பதே அவர்தம் வருத்தமாம். இதே குறிப்பு,

“நயனுடையான் நல்கூர்ந்தான் ஆதல் செயும்நீர செய்யா தமைகலா வாறு"

என்பதற்குத் தக்க சான்றாம்.

"பிறர்க்கு உதவும் நற்பண்பாளன் வறுமையுடையனாதல் பிறர்க்குச் செய்யத்தக்க உதவிகளைச் செய்யாமல் வருந்துகின்ற தன்மையேயாம்" என்னும் இப்பொருளுக்கு, அப்படியே ஒப்ப அமைகின்றதன்றோ வள்ளலார் கொள்ளும் இரங்குதல். ஆகுல நீர

திருக்குறள் 'அறம்' என்னும் பெயராலும் வழங்கும். "மனத்துக்கண் மாசிலனாதல் அனைத்தறன்" என அறத்தின் இலக்கணத்தை முழுதுற அமைத்துப் பழுதறக் காட்டுவது அது. அதன் தொடர்ச்சியாக அறத்திற்குப் பொருந்தாத ஆரவாரச் செயல்களைப் பற்றியும் கூறும். அது “ஆகுல நீர பிற” என்பது. ஆகுலமாவது ஆரவாரம், ஆடம்பரம், பகட்டு, போலிமை, ஏமாற்று என்பனவெல்லாமாம்.

வள்ளலார் சில இடங்களுக்குச் செல்ல விரும்புகிறார். அவருடன் செலவு மேற்கொள்வதற்குப் புதுவை வேலு முதலியார் என்பார் விரும்புகிறார்; அதனை அஞ்சல் வழி எழுதி இசைவு வேண்டுகிறார். அவர் கருத்தை அறிந்த வள்ளலார் இரத்தின முதலியார்க்கு எழுதிய கடிதத்தில் (20), "அவர்கள் வந்தால் என் பிரயாணம் எல்லவர்க்கும் வெளிப்படும். வெளிப்பட்டால் அநேகர் என்னுடன் கூடி வர பிரயாணப்படுவார்கள். ஆரவாரப் பிரயாணமாக முடியும். ஆகலில், தாங்களும் அவர்களுக்கு இது விஷயத்தில் தெரிவிக்க வேண்டும். நான் மாத்திரம் ரகசியமாக வரும்படி நிச்யித்திருக்கிறேன. அவசியம் வருவேன்" என எழுதுகின்றார்.

‘ஆகுலநீர’ என்பதைத் தானே “ஆரவாரப் பிரயாணமாக முடியும்"

என்கிறார். இம்மட்டோ? இருபத்தெட்டாம்