உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 34.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20

இளங்குமரனார் தமிழ்வளம் - 34 ஓ

கடிதத்தில் வள்ளலார் தூயவுள்ளம் அப்படியே பளிச்சிடு கின்றது.

"இராமலிங்கசாமி என்று வழங்குவது என் சம்மதமன்று. என்னை? ஆரவாரத்திற்கு அடுத்த பெயராகத் தோன்றுதலில். இனி, அங்ஙனம் வழங்காமை வேண்டும்" என்னும் அடிகளார் கட்டளையில் ஆரவாரத்திற்கு அடுத்த பெயர் என்னும் சுட்டுண்மை நோக்கத்தக்கது.

இக்கருத்தை வலியுறுத்துவார்போல், 'தெய்வத்தைத் தெரிந்து கொள்ளாது இவ்வுலகத்தார் என்னைத் தெய்வமெனச் சுற்றுகின்றார்கள். ஐயோ, நம் சகோதரர்கள் தெய்வத்தைத் தெரிந்து கொள்ளாததினாலே யல்லவா நம்மைச் சுற்றுகிறார்கள் என்று நான் உள்ளும் புறமும் பரிதாபப்பட்டுக் கொண்டே இருந்தேன்; இருக்கின்றேன்; இருப்பேன்" என்கிறார் வள்ளலார். கொடியேற்றுரையாகிய இது வள்ளலாரின் மாசிலா நெஞ்சத்தை எவ்வளவு தெளிவாகக் காட்டுகின்றது!

நாயக்கர்சாமி என்பவர் தற்காலம் இவ்வுலகில் இருக்கின்ற தான்தோன்றிச் சாமிகளில் தலைநின்ற சாமி என்க. என்னை? அறிய வேண்டுவனவற்றை அறிய முயலாமையோடு பித்த மயக்கான் மனஞ் சென்ற வழிசென்று பித்தச் சாமி என்னும் விசேடப் பேர் ஒன்று மிகையாகக் கொண்டிருக்கின்றனர். ஆகலிற் சூழும் வண்ணம் சூழ்க" என இரத்தினர்க்கு எழுதும் இருபத்தொன்பதாம் கடிதத் குறிப்பு, 'ஆகுலுநீர' என்பதையும், கூடா ஒழுக்கக் குறிப்புத் தழுவியது என்பதையும் கண்டு கொள்க. அழிபசி தீர்த்தல்

வறியவர் பசியைத் தீர்த்தற்கு என்றே ஒருவன் திருவருளால் செல்வனாக உள்ளான்" என்பது வள்ளலார் கருத்து. "அப் பசிப்பிணி போக்காமல் வறிதே பிறவழிகளுக்குச் செலவிடப்படும் செல்வம் குற்றமுடையதாகும்" என்பது அவர் முடிபு. இதனை இரத்தினர்க்கு எழுதிய ருபத்தொன்பதாம் திருமுக வழியே அறிய வருகின்றது.

"அருநெறி செல்வோர்க்கும் அச்சுறுத்தத் தக்க இவ்வெய்ய பருவத்தின்கண் வான்பெயல் அறியா வன்னெறிப் பட்டு மெய்வருத்தங் கோடல் ஒன்றோ! எவ்வகையானும் களைகண் ன்றிப் பசித்தாரது பசி நீக்குதற் பொருட்டே திருவருளாற் கிடைக்கும் பொருட்கருவியை அங்ஙனம் செலுத்தல் இன்றி ங்ஙனம் செலுத்தும் வெறுஞ் செயற்பாட்டிற்கு ஒருப்படும்