உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 34.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் வழியில் வள்ளலார்

21

குறைமையும் கோடற்கு இடனாம். ஆகலில், இதுவிடயத்தில் துணிந்துரைத்தற்குச் சித்தமும் நாவும் செல்வன அல்ல" என்கிறார்.

இத்திருமுகத்தால்,

-

வள்ளலாரைத் தம்மிடத்திற்கு

வருவித்தற்கும் அவர் பொருட்டாகப் பொருள் செலவிடுதற்கும் இரத்தினர் முயன்றார் என்றும், அம்முயற்சி வெறுஞ் செயற் பாட்டிற்குரியதாய் அற்றார் அழிபசி தீர்த்தற்கு உதவாததாய் - குறைப்படத்தக்கதாய் அமையும் என்றும் குறிப்பிட்டு அச்செயலை விடுக்குமாறு அறிவுறுத்துகிறார் என்பது அறியப்படும்.

“அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன் பெற்றான் பொருள்வைப் புழி”

என்னும் குறள்மணியின் உள்ளுறை ஈதேயாம்.

"வறியவர்களின் கடும்பசியைத் தீர்த்தற்குப் பயன்படும் செல்வமே பின்னாளில் தம் நலப்பாட்டுக்காக வைப்பகத்தில் போட்டு வைக்கப்பட்ட பாதுகாப்பான செல்வம்" என்னும் இக்கருத்துடைய குறளின் ஒளிதானே வள்ளலார் எழுத்தில் வெளிப்படுகின்றது!

அழிபசி என்பதன் பெருவிளக்கம் மேலே வரும்.

அன்பியல்

இதே கடிதத்தில் வேலு முதலியார் இயல்பை அருமையாகக் குறிப்பிடுகிறார் அடிகளார்:

“என்னை அன்றித் தன்னையும் கருதார்; அன்றிப் பொன்னை யும் கருதார்; என்று கருதப்படும் அன்பர் வேலு முதலியார்" என்பது அது.

அன்பின் இலக்கணமாக வள்ளுவர் சொல்வது இது

தானே!

“அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்

என்பும் உரியர் பிறர்க்கு’

27

என்பதிலுள்ள என்பும் (உடம்பும்) என்பதைத் தானே 'தன்னையும் கருதார்' என்றார். அதற்குமேல் பொன்னையும் கருதார் என்று விலக்கி, 'என்னையே கருதும் அன்பர்' என நிறுவுகின்றாரே! குறள் போலவே குறுநடையில் அன்பின் இலக்கணத்தை அமைத்துக் காட்டுகிறார் அல்லரோ வள்ளலார்!