உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 34.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22

இளங்குமரனார் தமிழ்வளம் - 34

பிறவிப் பெருங்கடல்

இறுக்கம் இரத்தினர்க்கு எழுதிய திருமுகக் குறிப்புகளில் (2) பற்ற வேண்டியவை பற்றி உரைக்கிறார் வள்ளலார். பெரியாரைத் துணைக்கோடலும் இறைவன் திருவெழுத்தை இடைவிடாது நினைத்தலும் பற்றியுரைப்பது அது.

"அவசியம் சாதுக்கள் சார்பு வேண்டும்; சாதுக்கள் சார்பு தற்காலத்தில் கிடைப்பினும் கிடையாவிடினும் நம்மை எழு பிறப்பென்னும் பெருங்கடலைக் கடப்பித்துப் பேரின்ப மென்னும் கரையிலேற்றும் சைவப்பதியில் தெய்வப் புணையாக வாய்த்த திருமந்திரமாகிய பஞ்சாக்கரத்தை இடைவிடாது சிந்தித்துக் கொண்டும் சிவபிரான் திருவடிகளைப் பாவித்துக் கொண்டும் வருவது முக்கியத்தினும் முக்கியம்; ஆகலின் நாம் அவசியம் பற்ற வேண்டிய காரியம் இவை; மற்றவையன்று."

"பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவ னடிசேரா தார்”

என வரும் பிறவிக்கடல் உருவகத்தை அப்படியே கையாள்கிறார் வள்ளலார். பிறவியைக் கடலாகக் கூறிய வள்ளுவர் இறைவன் அடியைப் புணையாக (மிதப்பாக)க் கூறாமல் கற்பார் கண்டு கொள்ள விடுத்தார். வள்ளலார் புணையைத் தந்ததுடன் கரையையும் காட்டுகிறார். கடல் நீந்துவார் கரை சேரவேண்டும் அல்லவோ!

முகநட்பும் அகநட்பும்

நட்பு என்பது உறுதியானது, நெருக்கமானது என்னும் பொருளது.நட்பு காதல் ஒருமைக்கு ஒப்பானது. அந்நட்பு உணர்ச்சி ஒப்பால் ஏற்படுவது; புணர்ச்சி நட்பு என்பது புல்லிதே. இவை வள்ளுவக் குறிப்புகள். நட்பின் அருமை உணர்ந்தே நட்பு, நட்பாராய்தல், கூடா நட்பு, நட்பிற்பிழை பொறுத்தல், பழமை எனப் பல அதிகாரங்கள் திருக்குறளில் வைக்கப்பட்டுள.

கூடா நட்பில், உள்ளொத்த அன்பு இல்லாதவரோடு உறவாட நேருங்கால் முகத்தால் நட்புப்போல் காட்டி அகத்தால் நட்பு இன்றி இருத்தல் வேண்டும் என்பார் வள்ளுவர்.

“பகைநட்பாங் காலம் வருங்கால் முகம்நட்டு அகநட்பு ஒரீஇ விடல்"