உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 34.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் வழியில் வள்ளலார்

23

என்பது அக்குறள். வள்ளலார் இக்கருத்தை உட்கொண்டு எழுதுவார் போல வேலு முதலியார்க்கு எழுதிய கடிதத்தில் (1),

“நல்லார் எனத்தாம் நனிவிரும்பிக் கொண்டாரை

அல்லார் எனினும் அடக்கிக் கொளல்வேண்டும்

9

என்றபடி ஸ்ரீ ரத்ன முதலியாரைத் தாங்கள் அடக்கிக் கொண்டது பெரிய காரியம். அப்படிப்பட்ட இடங்களிலெல்லாம் வாக்கினாற் சமீபித்தும் மனத்தினால் நெடுந் தூரமாகியும் ருக்கவேண்டும்" என்கிறார். வாக்கினால் சமீபத்தில், சொல்லால் நெருங்குதல்; "மனத்தினால் நெடுந்தூரமாதல்" உள்ளத்தால் அகலுதல் என்பவற்றைக் காண்க. உள்ளும் புறமும் வேறாதல்,வினைவேறு சொல்வேறு படுதல் என்னும் கவடு அல்லது வஞ்சம் இஃதாகாமை கொள்க. இது குற்றமாம் நிலை மேலே பாடற்பகுதியில் விளக்கமாம்.

வரவு செலவு

வருவாய் குறைய வரினும் அதனால் குறைவு இல்லை. அவ்வருவாயினும் செலவு மிகாமல் பார்த்துக் கொள்ளுதல் வேண்டுமென வலியறிதலில் கூறுவார் வள்ளுவர்.

66

'ஆகாறு அளவுஇட்டிது ஆயினும் கேடில்லை

போகாறு அகலாக் கடை

99

என்பது அக்குறள். ஆகாறு வருவாய்; இட்டிது - சிறிது; போகாறு-செலவு; அகலுதல் - பெருகுதல்.

இப் பொருளியற் கருத்தில் வள்ளலார் உள்ளம் ஆழமாகப் பதிந்திருந்தமை கடிதங்கள் பலவற்றால் அறியக் கிடக்கின்றது. “வரவுக்குத் தக்க செலவு செய்யவேண்டும்" {6)

“வரவுக்கு ஒத்த செலவொடு வாழ்தல் வேண்டும்" (23)

"வரவுக்குத் தக்க செலவு செய்து கொண்டு தேகத்திற்குத் திடமுண்டாகும்படி உபசரித்துக்கொண்டு சாக்கிரதை

யோடிருக்க வேண்டும் (27) - என இறுக்கம் இரத்தினர்க்கும்

"தாங்கள் வரவுக்குத் தக்க செலவு செய்து கொண்டிருக்க வேண்டும்" (8) எனப் புதுவை வேலர்க்கும் வரைந்த கடிதங்களில் குறிப்பிடுகிறார் வள்ளலார்.