உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 34.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24

உலகு இன்புறல்

இளங்குமரனார் தமிழ்வளம் - 34 ஓ

"கற்றவர் ஒருவர் தாம் எவ்வகையால் எதனால் இன்பம் அடைகிறாரோ அதனை அவ்வகையால் பிறரும் அடைவதை விரும்புவர் என்பது பொய்யாமொழி. இதனைத்

"தாமின் புறுவ(து) உலகின் புறக்கண்டு காமுறுவர் கற்றறிந் தார்”

என்பார். இக்கருத்து வள்ளலார் அருளிய சபை விளம்பரத்தில் (7) அருமையாக விளக்கமாகின்றது.

"அறிவு வந்த காலமுதல் அறிந்து அறியாத அற்புத அறிவு களையும், அடைந்து அறியாத அற்புத குணங்களையும், கேட்டு அறியாத அற்புதக் கேள்விகளையும், செய்து அறியாத அற்புதச் செயல்களையும், கண்டு அறியாத அற்புதக் காட்சிகளையும், அனுபவித்தறியாத அற்புத அனுபவங்களையும் இது தருணந் தொடங்கிக் கிடைக்கப் பெறுகின்றேன் என்றுணருகின்ற ஓர் சத்திய உணர்ச்சியாற் பெருங்களிப் புடையேனாகி

இருக்கின்றேன். நீவிர்களும் அவ்வாறு பெற்றுப் பெருங்களிப் படைதல் வேண்டும் என்று எனக்குள்ளே நின்று நிறைந்து எழுந்து வெளிப்பட்ட எனது சுத்த சன்மார்க்க லக்ஷியமாகிய ஆன்ம நேய ஒருமைப்பாட்டுரிமைப் பேராசை பற்றியே இதனைத் தெரிவிக்கின்றேன்" என்பது அது.

இதே கருத்து வள்ளலாரிடம் ததும்பி வழிந்தமை பாடல்களில் பல இடங்களில் வெளிப்படும். ஒரெடுத்துக் காட்டு:

“ஏனுரைத்தேன்? 'இரக்கத்தால் எடுத்துரைத்தேன் கண்டீர்;' யானடையும் சுகத்தினைநீர் தானடைதல் குறித்தே'

என்பது அது.

பொறுத்தலும் மறத்தலும்

பொறையுடைமை வள்ளுவ அதிகாரங்களுள் ஒன்று.

அதில் ஒரு குறள்:

“பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை

மறத்தல் அதனினும் நன்று”

"ஒருவர் குறையைப் பொறுப்பது சிறப்பு; அதனை அறவே மறந்து விடுவது அதனினும் சிறப்பு" என்னும் பொருளுடைய