உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 34.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் வழியில் வள்ளலார்

25

இக்குறளின் விரிவாக்க விளக்கமாகச் சன்மார்க்க சங்கத்தார் பழக்க விதிகளை வகுக்கிறார் வள்ளலார்.

"ஆண்டவர் ஒருவர் உள்ளார் என்றும், அவர் பொதுப்பட உலகத்திலுள்ளார் யாவரும் சன்மார்க்கப் பெரும்பயன் பெற்று நித்திய வாழ்வு வாழ்தற் பொருட்டு வெளிப்படக் காரியப்படு கின்றனர் என்றும் அது காலையில் நாமும் ஆன்மலாபத்தைப் பெற்றுக் கொள்வோம் என்றும் நம்பி இங்கே வசிக்கும் யாவரும் வழிபாடு விஷயத்தில் ஒரு தடையும் சொல்லாது ஒத்து இருத்தல்” அவசியம்.

"அன்றியும், கால பேதத்தால் அல்லது மற்ற வகையால் அவ்வத் தருணங்களில் நேரிடும் குரோதத்தால் விளையும் துவேஷாதிகள் உண்டாயினாலும் அல்லது உண்டாகிறதாய் இருந்தாலும் உடனே ஜாக்கிரதைப்பட்டு அதை முற்றிலும் மறந்து விடல் வேண்டும். அப்படியிருத்தல் மேல்விளைவை யுண்டுபண்ணாதிருக்கும். அப்படி இனிமேல் ஒருவரை ஒருவர் அதிக்கிரமித்த வார்த்தைகளால் சண்டை விளையத்தக்கதாக வைதாலும் அப்படி வைதவர்களையும் அந்த வைதலைக் கேட்டுச் சகிப்பவர்களோடுமறுபடி துவேஷ்த்தை ஒருங்கே விட்டு மறந்து மனக் கலப்புடன் மருவுதல் வேண்டுவது. அப்படி மருவாதவர் களையும் உடனே ஒதுக்கிவிட வேண்டுவது. அல்லது குரோதத்தால் விளையும் அக்கிரம அதிக்கிரம வார்த்தைகளைக் கேட்டுத், தாங்கள் வார்த்தையாடாமல் கூட்டத்தாரில் அப்போது இருக்க வாய்ந்த இரண்டொருவர்க்குத் தெரிவித்தல் வேண்டும். அப்படித் தெரிவிக்காதவர்களும் எதிர்த்துச் சண்டை தொடுப்பவர்களும் இங்கிருத்தல் அனாவசியம். அப்படிப்பட்டவர்களை ஒரு பேச்சு மில்லாமல் இந்த இடம் விட்டுப்போய்விடத்தக்க முயற்சி ஒவ்வொருவம் செய்தல் வேண்டுவது."

"ஒத்து இருத்தல்", "முற்றிலும் மறந்து விடல்”, “மறந்து மனக்கலப்புடன் மருவுதல்" என்பவற்றையும் 'பொறுத்தல்', 'மறத்தல்' என்பவற்றையும் இணைத்துப் பார்க்க.

கழிநடை

"இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே

ஒழுக்க முடையார்வாய்ச் சொல்”

என்பார் திருவள்ளுவர். 'ஒழுக்கமுடையவர் கூறும் உறுதிச்

சொல், வழுக்கல் நிலத்து நடப்பவர்க்கு

ஊன்றுகோல்