உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 34.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

<

26

இளங்குமரனார் தமிழ்வளம் - 34 ஓ

உதவுதல்போல் உதவும்" என்பது இதன் பொருள். ஊன்றுகோல், ஊற்றுக்கோல்' என வலித்தல் பெற்றமை நம்பிக்கொண்ட கோல் நல்வலியையுடையதாகவும் இருத்தல் வேண்டும் என்னும் குறிப்பினதாம். இல்லாக்கால் தளர்ச்சிக்குத் துணையாம் அக்கோலே, தன் வன்மையின்மையால் பெருங்கேடு நேர்தற்கு வழி செய்துவிடும் என்னும் எச்சரிக்கை காட்டுவதாம்.

இவ்வூன்றுகோல் இவ்வாறமைய வள்ளலார், இரட்டுறல் விளங்க, ஒழுக்கமுறை ஒன்றனை இனிதின் விளக்குகிறார்.

இரத்தினர்க்கு எழுதிய பதினாறாம் திருமுகத்தில், "தாம் உலகியற்கண் ஒழுகுங்கால் கழிநடை ஒருவன் கட்பார்வை போன்றொழுகல் வேண்டும் என்றும் பிரார்த்திக்கிறேன்" என்று எழுதுகின்றார்.

கம்பூன்றி நடக்கும் ஒருவன் நடை கழிநடையாம். அன்றியும் கம்பின்மேல் நடப்பவன் நடையும் (கழைக் கூத்து, ஏற்றக்கோல், நடைபாதை மரம்) கழிநடையாம். இக்கழிநடை ஒருவன் கண்பார்வை, எப்படி இருக்க வேண்டும்? புறம் பாராமல் காலும் கோலும் நோக்கிய நோக்குடன் அமையவேண்டும். இப்பால் அப்பால் சாயாமலும் இயலவேண்டும். இவ்வாறே உலகியல் உணர்ந்து மெய்ப்பொருள் கண்டார் தம் வாழ்வியல் இயல் வேண்டும் என்பவற்றைக் குறிப்பாக உணர்த்துகிறார் வள்ளலார்.

அவர் சொல், ஒழுக்கமுடையார் சொல்லாதலால் ஊற்றுக் கோலாம் தன்மையது என்பதையும், அதற்குக் கழிநடையை ஒப்புமை காட்டுதல் வள்ளுவமேல் வளர்ச்சி என்பதையும் அறிதல் நனிநயமாம்.

வள்ளலார் வரைந்த கடிதங்கள் மிகப்பலவாக இருந் திருக்கக்கூடும். ஆனால், அரிதின் முயன்று பெற்று அச்சிடப் பட்ட வகையால் கிடைத்த கடிதங்களைக் கொண்டு ஒப்பிட்ட ஒப்பீடுகள் இவை. உரைநடை நூல்களில் காணப்படும் குறள் வழித் தொடர்புகளை மேலே காண்போம்.