உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 34.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. வள்ளலார் உரைநடை நூல்களும் திருக்குறளும்

வள்ளலார், உரைநடையில் வரைந்த நூல்கள் இரண்டே. அவை, மநுமுறை சுண்டவாசகம், சீவகாருணிய ஒழுக்கம் என்பவை. சன்மார்க்க விண்ணப்பங்கள் என்பதும் இரண்டாவது நூலைத் தழுவி எழுந்ததேயாம். ஆதலால் உரைநடை நூல்கள் மூன்று எனவும் கொள்ளலாம்.

இனி, விளக்கவுரை வரைந்த நூல்களும் உள. அவை இவற்றின் வேறானவையாகலின் அவற்றையும், உபதேசப் பகுதி களாக வருவனவற்றையும் இதனைத் தொடர்ந்து காணலாம். அவையும் உரைநடை வகையில் அமைந்தவை யாகலின். நீதியும் முறையும்

பெரிய புராணத்தில் திருநாட்டுச் சிறப்பு என்பதை அடுத்துள்ளது மநுநீதி கண்ட புராணம். அச்செய்தியைக் கொண்டு வள்ளலார் மநுமுறை கண்ட வாசகம் எழுதினார். உரைநடையால் எழுதுவதை 'வாசகம்' என்பது பிற்கால வழக்கு. அவ்வழக்குக்குத் தகத் தாம் இயற்றிய நூலை 'வாசகம்' என்றார் எனினும் மநுநீதியை, மநுமுறை என மாற்றியமை ஆயத்தக்க அருமையுடையதாம்.

மநுமுறை என்னும் பெயரமைப்பிலேயே வள்ளலார் கொண்ட வள்ளுவ நாட்டம் இனிது விளங்குகின்றது. திருக்குறளில் செங்கோன்மை, கொடுங்கோன்மை என்பவை இரண்டு ண்டு அதிகாரங்கள். இவவை அடுத்தடுத்துள்ளவை (55, 56). “ஓர்ந்துகண் ணோடா திறைபுரிந் தியார்மாட்டும்

தேர்ந்துசெய் வஃதே முறை'

என்பது செங்கோன்மை முதற்பாட்டு. முறை என்பதன் இலக்கணமாக இப்பாடல் இருப்பதுடன் மனுவேந்தன் முறை செய்த முறையையும் விளக்குவதாக உள்ளது. மகன் எனவும் பாராது முறை செய்தவன் அவன் அல்லனோ!

மேலும், முறை காக்கும் (547), முறை செய்யா (548,553,558), முறை கோடி (559) என்றும் முறை ஆளப்பட்டுள்ளது.