உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 34.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28

இளங்குமரனார் தமிழ்வளம் - 34 34

அவ்வாட்சிக் கருத்தே மநுநீதியை மநுமுறையென வள்ளலார் கொள்ளுதற்குத் தூண்டிய தெனலாம்.

திருக்குறள் அடைவு

மநுமுறை கண்ட வாசகத்தில் திருக்குறள் கருத்துகள் மிகப் பல ஊடாடியுள. அவற்றைக் காணலாம்.

<

மநுவேந்தன் இயல்புகளைக் கூறுகிறார் வள்ளலார்:

து து ர்க் குணங்களையுடைய சிறியோர்களைச் சேர்த்துக் கொள்வதை மறந்தாயினும் நினையாமல், நற்குணங்களில் நிறைந்து செய்வதற்கு அரிதான செய்கைகளையும் செய்து முடிக்கவல்ல பெரியோர்களைச் சகாயமாகக் கொண்டு, செய்யத்தக்க காரியங் களைத் தெரிந்து செய்தும், செய்யத்தகாத காரியங்களைத் தெரிந்து விடுத்தும், எதிராளி வலியும் தன் வலியும் துணையானவர் வலியும் காலநிலையும் இடநிலையும் அறிந்து காரியங்களை நடத்தியும், அடுத்தவர்களது குணம் வல்லமை ஊக்கம் முதலான தன்மைகளை ஆராய்ந்து தெளிந்து அவரவர் தரங்களுக்குத்தக்க உத்தியோகங்களை அவரவர்களுக்குக் கொடுத்தும் பழமை பாராட்டியும் சுற்றம் தழுவியும் கண்ணோட்டம் வைத்தும்' என விரித்துச் செல்கிறார்.

இதில் சிற்றினஞ்சேராமை, பெரியாரைத் துணைக் கோடல், வலியறிதல், காலமறிதல், இடமறிதல், தெரிந்து தெளிதல், பழமை, சுற்றந்தழாஅல், கண்ணோட்டம் என்னும் திருக்குறள் அதிகாரத் தலைப்புகளில் செய்தி இயலுதல் தெளிவாகும். மற்றும்,

"செயற்கரிய செய்வார் பெரியர்”

"செய்தக்க அல்ல செயக்கெடும்; செய்தக்க செய்யாமை யானும் கெடும்

66

"வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்

66

துணைவலியும் தூக்கிச் செயல்”

"இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து

அதனை அவன்கண் விடல்”

என்னும் குறள்களின் பொருள்கள் இடம் பெற்றிருத்தல் தெளிவாய் அறியக் கூடியதே.