உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 34.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் வழியில் வள்ளலார்

29

மனுவேந்தன் தகைமைகளை எடுத்துரைக்கும் வள்ளலார் அவனை நண்பனுக்கும் மழைக்கும் ஒப்பிட்டுக் காட்டுகிறார். அவ்வொப்பீடுகளில் வள்ளுவர் வாய்மொழியில் வள்ளலார் தோய்ந்திருத்தல் வெளிப்பட விளங்குகின்றது.

"குடிகளுக்கு ஆபத்து நேரிடும் போது கட்டிய வஸ்திரம் அவிழ்ந்தவன் கைகள் போல் உடனே அந்த ஆபத்திலிருந்து நீங்கும்படி கை கொடுப்பதனால் சினேகளை ஒத்தவராய் என்கிறார். இது,

“உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு”

என்னும் குறளை நினைவுபடுத்துவது என்பதைச் சொல்லவும் வேண்டுமோ?

"கைம்மாறு வேண்டாது கொடுத்தலால் மேகத்தை ஒத்தவராய்" என்று வள்ளலார் கூறுகிறார். இது,

"கைம்மாறு வேண்டாக் கடப்பாடு மாரிமாட்

டென்னாற்றுங் கொல்லோ உலகு”

என்னும் குறளில் பளிச்சிடுதலைப் பகரவும் வேண்டுமோ?

நட்பும் கொடையும்

நட்பை முகநட்பு, அகநட்பு என இருவகைப்படுத்துவார் திருவள்ளுவர். அதனை உட்கொண்ட வள்ளலார் மனுவேந்தன் மைந்தன் வீதிவிடங்கன் வாக்காக "முக நட்பாகப் பேசி முகந்துடைக்கின்றவர்கள் போற் சொன்னீர்க்ள்' என்றும், அதற்கு மறுமொழி கூறும் அந்தணர் முதலானவர்கள் வாக்காக "நாங்கள் முகத்துக்கு இச்சையாக முன்னொன்று பேசிப் பின்னொன்று சொல்கின்றவர்கள் அல்ல" என்றும் கூறுதல் எண்ணத்தக்கது. இவை "முகநக நட்பது நட்பன்று" என்பதை விளக்குதல் கண்கூடு.

அமைச்சியல்

"உலகத்தை ஆளும் அரசன் ஆசை பற்றியாவது வெகுளி பற்றியாவது தாட்சண்ணியம் பற்றியாவது உறவு பற்றியாவது நடுநிலையாக ஞாயங்கண்டு சொல்லாமல் மாறுபட்டால் அதை மறுத்து இது விஷயத்தில் அரசன் நம்மைக் கொல்லு வானாயினும் கொல்லட்டும் அவனுக்கு உறுதி கூறுவதே