உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 34.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30

-

இளங்குமரனார் தமிழ்வளம் 34ஓ

நமக்குக் கடன் என்று நிச்சயித்துக் கொண்டு ஞாயங்கண்டு நடுநிலையாகச் சொல்வது மதியுடைய மந்திரிகளுக்குத் தருமம்' என்று மனுவேந்தன் அமைச்சர்களை நோக்கிக் கூறுவதாக வள்ளலார் கூறுகின்றார்.

இதில் அமைச்சு அதிகாரச் செய்திகள் பொதுவாகவும்,

“அறிகொன் றறியான் எனினும் உறுதி

உழையிருந்தான் கூறல் கடன்

""

என்னும் குறட்செய்தி சிறப்பாகவும் இடம் பெற்றிருத்தலை அறியலாம்.

எதனை நோக்கியும் நடுவு நிலைமை தவறுதல் கூடாது என்பதை இப்பகுதியில் விளக்குவதுடன், இதனை அடுத்தே "தாய் தந்தையிடத்திலாயினும் தராசுக் கோல் போலச் செப்பமாக நின்று தீர்ப்புக் கொடுக்கவேண்டுவது அரசர்க்கு அவசியம் வேண்டிய சற்கருமம்" என்றும், "எந்தப் பொருள் எந்தப் பிரகாரமாய் இருந்தாலும் அந்தப் பொருளின் உண்மையை அறிந்து கொள்வதும்" என்றும், "உருவு நோக்காது அறிவை நோக்குவதும்” என்றும் வருவன குறள் வழிப்பட்ட குறிப்புகள் என்பது வெளிப்படை.

இவை,

“சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்தொருபால் கோடாமை சான்றோர்க் கணி”

“எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்ப தறிவு”

"உருவுகண் டெள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்(கு)

அச்சாணி அன்னர் உடைத்து

""

என்னும் குறள்களை உள்ளடக்கியவை அல்லவோ!

வள்ளலார், நடுவு நிலையைச் செப்பம்' என அருமையாகச் சுட்டுகிறார். "செப்பம் உடையவன்" (112), "சொற்கோட்டம் இல்லது செப்பம் (119), "செப்பமும் நாணும் ஒருங்கு"(951) எனத் திருக்குறளில் நடுவுநிலை 'செப்பம்' என ஆளப்பட்டிருத்தல் அறியத்தக்கது.