உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 34.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வருமுன் காத்தல்

வள்ளுவர் வழியில் வள்ளலார்

31

மனுவேந்தன், "பின்னே துக்கம் தருவதான காரியங்களை முன்னே அறிந்து அக்காரியத்தைச் செய்யாது விடவேண்டும்; ஆலோசித்து அறியாது செய்துவிட்டால் அது பற்றித் துயரப் படாமல் மேல் செய்யத் தக்க காரியங்களை ஆலசியப்படுத்தாமல் செய்யவேண்டுமாதலால், வருவது தெரியாது மந்திரியை அனுப்பிய நாம் துக்கப்படுவதிற் பயனென்ன?" எனத் தன்னைத் தானே நொந்து கொள்கிறான்.

இப்குதியில்,

“வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர் வைத்தூறு போலக் கெடும்

“எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை அதிர வருவதோர் நோய்"

66

முன்னுறக் காவா திழுக்கியான் தன்பிழை

பின்னூ றிரங்கி விடும்"

"அறிவுடையார் ஆவ தறிவார்; அறிவிலார் அஃதறி கல்லா தவர்"

என்னும் குறள்களின் திரட்டுப் பொருளும்,

“எற்றென் றிரங்குவ செய்யற்க செய்வானேல் மற்றன்ன செய்யாமை நன்று”

என்னும் குறளின் மேல் விளக்கமும் அமைந்திருத்தல் தெளிவாம். அருளுடைமை

சீவகாருணிய ஒழுக்கம் என்பது அருளொழுக்கமே. இவ் வருளொழுக்க விரிவு அருளுடைமைத் திருக்குறள் விளக்கமேயாம்.

நாலாயிரப் பனுவலுக்கு (பிரபந்தத்திற்கு) முப்பத் தாறாயிரப்படி அமைந்ததுபோல் திருக்குறள் அருளுடைமை அதிகாரத்திற்கு அமைந்த பெருவிளக்கம் சீவகாருணிய ஒழுக்கம் எனின் தகும்.

5"

"மன்னுயிர் ஓம்பி அருளாள்வான்' என அருளாளன் இலக்கணம் கூறும் வள்ளுவர் (244) அருளுடைமைக்கு அடிக் களமாம் கொல்லாமையிலே "பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்"