உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 34.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் வழியில் வள்ளலார்

"பொருளாட்சி போற்றாதார்க் கில்லை அருளாட்சி ஆங்கில்லை ஊன்தின் பவர்க்கு”

என்றார். மேலும்,

“தன்னூன் பெருக்கற்குத் தான்பிறி தூன்உண்பான்

எங்ஙனம் ஆளும் அருள்"

""

43

என்றும் வினாவுவார். இவ்வினாவின் விளக்கம்போல் அமைகிறது வள்ளலார் வினாவும் விடையும். இது உபதேசப் பகுதி சார்ந்தது.

'கடவுளது திருவருளை எவ்வாறு பெறக் கூடும்? என்பது வள்ளலார் தாமே அமைத்துக் கொள்ளும் வினா. அதற்கு விடை, "அருளென்பது கடவுள் தயவு; சீவகாருணியம் என்பது சீவர்கள் தயவு. ஆதலால் சிறு வெளிச்சத்தைக் கொண்டு பெருவெளிச் சத்தைப் பெறுவதுபோல் சிறிய தயவாகிய சீவ தயவைக் கொண்டு பெருந் தயவாகிய கடவுள் அருளைப் பெறவேண்டும்' என்கிறார்.

அருட்கல்வி

59

மெய் வாய் கண் மூக்கு செவி என்னும் ஐம்பொறிகளால் அறியும் அறிவு ஐயறிவு. அதனின் மேலாம் அறிவு மன அறிவாம் ஆறாம் அறிவு. பகுத்தறிவு மெய்யறிவு இலங்கறிவு விளங்கறிவு என்பனவும் அது.

ஐயறிவை ஐயுணர்வு என்னும் வள்ளுவர், மெய்யறிவை மெய்யுணர்வு என்பார். "ஐயுணர்வை ஒருவர் அடைந்தாலும் பயனில்லை, மெய்யுணர்வு என்னும் ஒன்று இல்லாதவருக்கு " என்று மெய்யுணர்வுச் சிறப்பை அவர் குறிப்பார்.

"ஐயுணர் வெய்தியக் கண்ணும் பயமின்றே

மெய்யுணர் வில்லா தவர்க்கு"

என்பது அது (354)

மெய்யுணர்வு உண்டாகும் வகையை, "ஓர்த்து உள்ளம் உள்ளது உணர்தல்" என்றும், "ஐயத்தின் நீங்கித் தெளிதல்" என்றும், "மருள் நீங்கி மாசறக்காணல்" என்றும் (357, 353, 352) திருவள்ளுவர் கூறுவார்.

இதனை வள்ளலார் எளிய உரைநடை ஓட்டத்தில் உவமையால் தெளிவிக்கிறார்: