உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 34.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44

34ஓ

இளங்குமரனார் தமிழ்வளம் - 34

"பத்து ஆள் சுமை ஒரு வண்டிப்பாரம்; நானூறு வண்டிச் சுமை ஒரு சூல் வண்டிப் பாரம். சூல் வண்டி ஆயிரம் கொண்ட நூல்களை ஒரு ஜென்மத்தில் ஒருவன் அதிதீவிர ஜீவமுயற்சியால் படிக்கச் சிறிய உபாசனைச் சகாயத்தால் முடியும். அப்படிப் பட்டவன் ஆயிரம் ஜென்மம் எடுத்துப் படிக்கும் கலையறிவை ஒருவன் அருள் முன்னிடமாகச் சுத்த சிவநோக்கத்தால் அறியத் தொடங்கினால் ஒரு கணத்தில் படித்துக் கொள்ளலாம். இது சத்தியம்" என்கிறார்.

இதனால் கல்வியை அறிவுக் கல்வி என்றும் அருட் கல்வி என்றும் இரண்டாகப் பகுத்துக் கொண்டு அறிவுக் கல்வியினும் அருட்கல்வி எத்துணை ஏற்றமுடைய தென்பதை விளக்குகிறார் வள்ளலார். வள்ளுவர் சுட்டும் ஐயுணர்வு என்பது அறிவுக்கல்வி. மெய்யுணர்வு என்பது அருட்கல்வி என வள்ளலாரால் ஆளப் பெறுதல் அறிந்து இன்புறத் தக்கதாம்.

உணவு

மருந்து என்னும் திருக்குறள் அதிகாரத்திலுள்ள பத்துப் பாடல்களுள் ஆறுபாடல்களில் உண்டி பற்றியே கூறப் பட்டுள்ளது. "உணவே மருந்து" என இவ்விருபதாம் நூற்றாண்டில் எழுந்துள்ள குரல் வள்ளுவர் குரல் என்பதை உலகோர்க்கு நாம் அறிவிக்க முயன்றோமில்லை; கருதினோமும் இல்லை.

"மருந்தென வேண்டா; ஆம்!" எனத் திட்டமாகக் கூறுகிறார் திருவள்ளுவர். “அருந்தியது அற்றது போற்றி உண்க”, "அற்றால் அளவறிந்து உண்க", "அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறல்ல துய்க்க துவரப் பசித்து", "மாறுபாடில்லாத உண்டி மறுத்துண்ணின் ஊறுபாடு இல்லை”, “இழிவறிந்து உண்பான் கண் இன்பம்”, “கழி பேரிரையான்கண் நோய்”, “பெரிதுண்ணின் நோய் என்றெல்லாம் உணவைக் காட்டியே மருந்ததிகாரத்தை ஓடவிடுகிறார் வள்ளுவர்.

வள்ளலார் தேர்ந்த மருத்துவர்; சித்தமருத்துவர். அவர் கூறுகின்ற "உணவு மருத்துவம்" தனியாய்வுக்கும் தனி நூலுக்கும் உரியது. இவண் சில குறிக்கலாம். இக்குறிப்புகள் வள்ளுவர் தரும் மருந்தின் விரிவுரை போல்வன என்பது தெளிவாக விளங்கும்.

"எப்படிப்பட்ட போஜனம் ஆயினும் சிறிது குறையவே புசித்தல்வேண்டும். எந்தக் காலத்திலும் பசித்தால் அல்லது எந்தவகையிலும் போஜனஞ் செய்யப்படாது. வாத பித்த