உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 34.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் வழியில் வள்ளலார்

45

சிலேத்துமங்கள் அதிகரிக்கத் தக்க போஜனங்களை அறிந்து விடல் வேண்டும்.

77

"இராப் போஜனம் பகற் போஜனத்தைப் பார்க்கிலும் அற்பமாகப் புசித்தல் வேண்டும். இரவில் தயிர் கீரை வாயுவான பதார்த்தம் குளிர்ச்சியான பதார்த்தம் சேர்க்கப்படாது. சூடான பதார்த்தங்களையே அறிந்து சேர்க்கவேண்டும். அவை சிறுகத்தரி, முருங்கை, அவரை, வற்றல் முதலியவையாம்.

"பழஞ்சோறு, பழங்கறி, எருமைப்பால், எருமைத் தயிர் மோர் நெய், செம்மறிப்பால் தயிர் மோர் நெய், கேழ்வரகு, வரகு, தினை, சாமை, பருப்புவகை, அதிரசம், அப்பம், சுகியம், முதலிய சிற்றுண்டி, தயிர்ச்சோறு, புளிச்சோறு முதலிய சித்திரான்னம், காரரிசிச்சோறு, முளைக்கீரை, அகத்திக்கீரை, முன்னை முதலான இலைக்கறி, சுரை, பூசணை,பறங்கி, பீர்க்கு, புடல், பாகல், கடுகு, நல்லெண்ணெய், புளி, புகையிலை, கள், சாராயம், கஞ்சா, புலால், மாமிசம் முதலிய விலக்குகளை நீக்கி விதித்தவைகளை அனுசரித்தல்.”

'உண்ணத் தொடங்கும்போது முன்புசித்த போஜன முழுதும் ஜீரணித்ததை நன்றாய் ஊன்றியறிந்து, பின்பு ஜீரணித்த அக்கணமே விருப்பால் ஏறாமலும் வெறுப்பால் குறையாமலும் தராசுமுனைபோல் அளவறிந்து அந்த அளவின்படி அதிகவிரையும் அதிக தாமதமும் இல்லாத படி சமமாகப் புசித்தல்"

"புசிப்பில் பச்சரிசிச்சாதம், பசும்பால், பசுநெய், முருங்கை, கத்தரி, முள்ளி தூதுளை முதலிய இளங்காய், பொன்னாங் கண்ணி, தூதுளை முதலிய இளங்கீரை - இவைகளில் மிளகு ஒருபங்கு, சீரகம் காலே அரைக் கால் பங்கு, வெந்தயம் கால்பங்கு, புளிவீசம் பங்கு சேர்க்கப்பட்ட கறியமுது குழம்பு ரசம் முதலானவைகளைக் கொண்டு பெருங்காயம் வெங்காயம் வெள்ளைப் பூண்டு முதலானவைகளைத் தள்ளிப் புசித்தல்.”

பொது நிலையில் இவற்றைக் கூறும் வள்ளலார் சுத்த சன்மார்க்க ஆகாரம், சுத்த சன்மார்க்க ஆகாரவிலக்கு என்பவற்றையும் விரித்தெழுதுகின்றார். இவற்றின் விரிவைத் திருநெறிக் குறிப்புகள் என்னும் வள்ளலார் நூற்பகுதியில் கண்டு கொள்க.

முதற்குறிப்பிலே வாத பித்த சிலேத்துமங்களை வள்ளலார் குறிக்கிறார். இவற்றை வள்ளுவர் "வளி முதலா எண்ணிய மூன்று" என்பார். வளியாவது வாதம்.