உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 34.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46

இளங்குமரனார் தமிழ்வளம் - 34 ஓ

உண்டது அற்றபின் உண்ணலையும், மாறுபாடிலா உண்டி உண்ணலையும், உண்ணும் முறையையும், உணவே மருந்தாம் வகையையும் வள்ளலார் குறிப்புகள் விளக்கி நிற்கின்றன. அருளுடைமைக்குச் 'சீவகாருணிய ஒழுக்கம்' விளக்கமானாற் போல, மருந்து அதிகாரத்திற்கு வள்ளலார் கூறும் உணவுக் குறிப்புகள் விளக்கமாக அமைகின்றதாம்.

கொல்லாமை

/

"அறவினையாதெனில் கொல்லாமை”, “ஒன்றாக நல்லது கொல்லாமை", "கொன்றாகும் ஆக்கம் கடை' _”, “கொல்லாமை சூழ்வான் தலை" என்றெல்லாம் கொல்லாமை குறித்து ஓதுவார் திருவள்ளுவர்.

வள்ளலார், ஐம்பெரும் பாவங்களுள் கொலையே தலையாய கொடுமையது என்பதைத் தெளிவிக்கிறார்;

66

'கள் காமம் கொலை களவு பொய் இவ்வைந்தும் கொடிய துக்கத்தை உண்டு பண்ணும். அவ்வைந்திலும் கொலை விஷேஷ பாவம். எனினும் கள் உண்டவனுக்குக் காமம் உண்டாகாமல் இருக்காது. கொலை செய்யத் துணிவு வராமல் இராது. களவு செய்யாமல் இரான். பொய் பேச அஞ்சான். ஆகையால் இந்த ஐந்தையும் ஒழிக்கவேண்டியது அவசியம். இதில் ஒன்றை அடைந்தவன் ஆனாலும் அவனை மற்றவை தொடாமல் இரா" என்கிறார்.

கொலையே கொடும்பாவம் என ஏற்றுக் கொண்டவர் பிறவற்றுள் எதுவும் குறைவுடையதன்று; அவையும் பிறவற்றை உண்டாக்குவனவே என ஒருமீள் பார்வை பார்க்கிறார்

வள்ளலார்.

கள்ளுண்பானை, அவனை ஈன்றாளும் வேண்டாள்; சான்றோரும் எண்ணார்; ஊரார் நகுவர் என்று சுட்டும் வள்ளுவர் 'கள்ளுண்பான் நஞ்சுண்பான்" என முடிப்பார்.

""

காமமாவது பிறனில் விழைதல். பிறனில் விழைவான் "பேதை", "அறன்கடை "விளிந்தான்" என்று வள்ளுவரால் இகழப்படுவான்.

களவென்பது காரறிவாண்மை; களவறிந்தார் நெஞ்சில் கரவு நிற்கும்; களவு வீயா விழுமம் தரும்; கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை எனக் களவாடலைக் கடிந்துரைப்பார் வள்ளுவர்.

பொய்த்தபின் தன்னெஞ்சே தன்னைச் சுடும். பொய்யாமை அன்ன புகழில்லை; பொய்யாமையே அறம்; வாய்மையின் நல்ல