உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 34.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் வழியில் வள்ளலார்

47

பிற இல்லை; என்பவை பொய்யாமை பற்றி உடன்பாடு எதிர்மறை ஆகிய இருவகைகளாலும் வள்ளுவர் கூறுவன.

இவற்றைக் கருதின் கொலைக் கேடுபோலவே மற்றவையும் கேடானவை என்பது உணர வருமாகலின் வள்ளலார் "இந்த ஐந்தையும் ஒழிக்க வேண்டியது அவசியம்; இதில் ஒன்றை அடைந்தவன் ஆனாலும் அவனை மற்றவை தொடராமல் இரா" என்றார்.

தன்னை ஓம்பல்

இல்வாழ்க்கையில்

"தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் தான் என்றாங்கு, ஐம்புலத்தார் ஓம்பல் தலை”

55

என்றார் திருவள்ளுவர். இதில் தன்னை ஓம்புதலும் கட்டாயம் வேண்டுவதே என்பதனை வள்ளுவர் கருதினர். அதனாலேயே 'தான்' என்று எண்ணினார். இதனை உணர்ந்த பரிமேலழகர்,

"எல்லா அறங்களும் தானுளனாய் நின்று செய்ய வேண்டு தலின் தன்னை ஓம்பலும் அறனாயிற்று' என விளக்கினார். வள்ளலார் இதற்கு மேல் விளக்கம் செய்கிறார்.

"தனக்குள்ள ஆகாரத்தைக் கொடுத்துவிட்டுத் தான் பட்டினியிருப்பதல்ல. அப்படி இருந்தால் பாவம். வந்தவர் களின் பசியறிந்து தாங்காதவர்களாகில் தனது ஆகாரத்தைக் கொடுத்தும், சகிப்பார்கள் ஆகில் எவ்வகையிலாவது முயற் சித்தும் பசியைத் தணிக்கவும் அதற்கு இடமில்லையாகில் பச்சாத்தாபத்துடன் கடவுளைப் பிரார்த்தித்து இன்சொல்லினால் இனிக்கச் செய்து தான் கெட்டிருப்பதே மேலான புண்ணியம்."

இதில் தான் கொடுக்க முடியாத நிலையில் இரக்கப் படுதலும் இன்சொற் கூறலும் சாலும் என்றும், தன்னைப் பேணாது பிறரைப் பேணிப் பட்டினி கிடக்க வேண்டியதில்லை என்றும் வள்ளலார் குறிப்பிடுதல் விளங்கும். "முகன் அமர்ந்து இன்சொலனாகப் பெறின், அகன் அமர்ந்து ஈதலின் நன்றே" என வள்ளுவம் குறிக்குமாகலின் இரக்கப்படுதலும் இன்சொற் கூறலும் சாலும் என்றார்.

தான் கெட்டிருத்தல் என்பது, தான் வாழ்வதற்காக என்றில்லாமல் தன் வாழ்வு பிறர் வாழ்வுக்காகவே போற்றிக் கொள்ளத் தக்கது என்னும் கடப்பாடு உணர்ந்து தன்னைப் போற்றிக் கொண்டு இருத்தல் என்பதாம். மற்றும், உலகத்துயிர்களுள்