உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 34.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48

34ஓ

இளங்குமரனார் தமிழ்வளம் -34

தானும் ஓருயிர் ஆகலின் தன்னைப் போற்றலும் உலகப் பொதுக் கடமை புரிதலாக ஆதலின் தான் கெட்டிருத்தலாய் அமையும் என்பதுமாம்.

ஒத்த தறிதல்

"ஒத்த தறிவான் உயிர் வாழ்வான்" என்பார் வள்ளுவர். ஒத்தது என்பது என்ன?

தனக்கு இன்பஞ் செய்வது எதுவோ, அதுவே பிற உயிர் களுக்கும் இன்பம் செய்யும் என்றும், தனக்குத் துன்பம் செய்வது எதுவோ அதுவே பிற உயிர்களுக்கும் துன்பம் செய்யும் என்றும் உணர்ந்து கொள்ளுதல். அவ்வொத்துணர்வு உடையவனே உயிரோடு இருப்பவனாம்.

உயிருடையவன் பிறவுயிர்களின் துடிப்புகளையும் அறிவான். அத் துடிப்புகளை அறியாமல் செயலாற்றுபவன் உயிருடையவன் ஆக கான். செத்தவன் அவன். அதனால்தான் 'மற்றையான் செத்தாருள் வைக்கப்படும்" என்றார் வள்ளுவர்.

செத்தவரைத்தாம் பாடையில் வைப்பர்; தாழியுள் வைப்பர்; பெட்டியுள் வைப்பர்; மண்ணுள் வைப்பர்; கல்லறையுள் வைப்பர்; கட்டையில் வைப்பர்; இப்படி வைக்கப்படும் நிலைக்கும் ஒத்த தறியான் உயிர் வாழும் நிலைக்கும் வேறுபாடு இல்லையாம். மூச்சு விடுதல், நாடி துடித்தல், இயங்கல், உண்ணல் இவற்றை யுடைமையால் ஒருவன் உயிருடையவன் ஆகான். உயிர்களின் உணர்வை உணர்ந்து செயலாற்றுபவனே உயிருடையவன் என்பதாம்.

வள்ளலார் 'சாதனம்' என்பது பற்றி விளக்குகிறார்;

டு

"சாதனங்கள் ஒன்றும் வேண்டாம். ஏதாவது ஓர் சாதனம் சொல்லக் கேட்டு அதன்படி நடந்தால் சிறு ஒளி உண்டாம். அதைக் கண்டு பல்லிளித்து இறுமாந்து கெட நேரிடும். ஆதலால் காலந் தாழ்த்தாது எல்லாவுயிரையும் தன்னுயிரைப்போலப் பார்க்கும் உணர்வை வருவித்துக் கொள்ளவேண்டும்." இதுவே சாதனம்.

'நம்முடைய தலைவராகிய கடவுளை நாம் அடைவதற்கு அவர் எழுந்தருளியிருக்கும் கோட்டையின் சாவியாகிய அருள்வேண்டும். அவ்வருள், அன்பினால் அல்லது வேறு வகையால் அடைவது அரிது. அவ்வன்பு சீவகாருணியத்தால் அல்லது வேறு வகையால் வாராது. அன்னிய உயிர்களுக்கு