உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 34.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் வழியில் வள்ளலார்

49

இம்சை உண்டாகாமல் நடத்தலே சீவகாருணியம். இதுதான் சித்தி பெறுவதற்கு முதற்படியாக இருக்கின்றது" என்கிறார்.

இதில் வரும் எல்லா உயிரையும் தன்னுயிரைப்போல் பார்க்கும் உணர்வே ஒத்ததறிதல். அருள் அன்பினால் அல்லது வேறு வகையால் அடைவது அரிது என்பது, "அருளென்னும் அன்பீன் குழவி" என்னும் குறளின் குறிப்பு.

"கடவுள் எழுந்தருளியிருக்கும் கோட்டையை அடைய அருட்சாவி வேண்டும்" என்பது, 'அன்பிற்கும் உண்டோ அடைக்குந் தாழ்” என்பதன் மேல் விளக்கமாம்.

அன்பை அடைக்கும் தாழில்லை என்பது, 'அடையா நெடுங்கதவு அன்பு' என்பதாம். வள்ளலாரோ அக்கதவு அடைத்தே இருப்பினும் அதனைத் திறந்துவிடும் தாழ்க்கோல் அருள் என்கிறார். இப்படி இயல்பான உரைநடையிலேயே ணையற்ற வகையில் திருக்குறள் மின்னி ஒளி செய்ய வரை கின்றார் வள்ளலார். சீவகாருணிய ஒழுக்கப் பகுதியிலும் அருள் என்னும் திறவுகோல் குறிக்கப்படுதல் அறியத்தக்கது. சித்தி நிலை சித்திவளாகப் பகுதியில் விளக்கப்பெறும்.

குணக்குன்று

"குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி கணமேயும் காத்தல் அரிது”

என்பது திருக்குறள் நீத்தார் பெருமைப்பாட்டு. "துறவு மெய்யுணர்வு அவாவின்மை முதலிய நற்குணங்களாகிய குன்றின் முடிவின்கண் நின்ற முனிவரது வெகுளி தானுள்ள அளவு கணமே யாயினும் வெகுளப்பட்டாரால் தடுத்தல் அரிது" என இக்குறளுக்கு உரை கூறுவார் பரிமேலழகர்.

வள்ளலார், திருநெறிக் குறிப்புகளில் "ஞானிக்கு ஆன்மாக் களினது அபக்குவ பரிபாகத்தால் சினம் தோன்றினால் உடனே அந்த ஜீவன் பஸ்பமாகிவிடுவான் என்கிறார். கணமேயும் என்பதும் காத்தல் அரிது என்பதும், "உடனே பஸ்பமாகி விடுவான்" (சாம்பலாகி விடுவான்) என்பதால் விளங்க வைக்கிறார்.

இனிக் குணமென்னும் குன்றத்தின் கொடுமுடி கண்டு நிலைபெற்ற பெரியோர் வெகுளியாம் தன்மையைத் தம்மிடத்து நொடிப்பொழுதேனும் நிலைபெற விடல் இல்லை என்பதொரு பொருளும் இக்குறளுக்குக் காண வாய்க்கிறது.