உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 34.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50

இளங்குமரனார் தமிழ்வளம் - 34 ஓ

இதற்குச் சீரிய சான்றென வள்ளலார் வாழ்வியல் நிகழ்ச்சி ஒன்று விளங்குகின்றது.

வள்ளலார் முதன்மை மாணவர் தொழுவூர் வேலாயுதனார் என்பதை அறிவோம். அவர் வள்ளலார் பாடல்களைத் திரட்டி 1867 ஆம் ஆம் ஆண்டில் தமிழுலகம் துய்க்கும் வண்ணம் வெளியிட்டார். முதல் நான்கு திருமுறைகள் அடங்கிய பதிப்பு அது. அதன் முகப்பில், 'திருவருட் பிரகாச வள்ளலாரென்னும் சிதம்பரம் இராமலிங்கபிள்ளை அவர்கள் திருவாய் மலர்ந்தருளிய திருவருட்பா' எனக் குறித்திருந்தார். அதனைக் கண்ணுற்ற வள்ளலார் "விச், ஏங்காணும்; திருவருட் பிரகாச வள்ளலார் என்று உம்மை யார் போடச் சொன்னது?" என்று சினந்தார்.

தொழுவூரார்க்கு இவ்வினா அதிர்வாயிற்று. வள்ளலார் இவ்வாறு சினந்துரைக்க அவர் கண்டதில்லை, ஆகலின் விதிர் விதிர்த்தார். மறுமொழி ஒன்றும் சொல்ல ஓடாமல் திகைத்து நின்றார். அதனை ஆற்றாத வள்ளலார், "திருவருட் பிரகாச வள்ளல் ஆர் என்னும் சிதம்பரம் இராமலிங்கம் பிள்ளை" என்பது ஏற்கும் என அமைதி காட்டினார். இந் நிகழ்ச்சி, குணக்குன்றன்னார் சினத்தை ஒரு நொடிப் பொழுதும் தம்மிடத்து வளர விடார் என்பதற்குச் சான்றாக விளங்குதல் அறிக.

சினமும் வெகுளியும்

திருக்குறளில் வெகுளாமை என்பதோர் அதிகாரம். வெகுளாமையில் வெகுளி, சினம் என ரு சொற்களையும் ஆள்வார். சினத்தைக் 'கொல்லி' என்பார். "சினம் என்னும் சேர்ந்தாரைக் கொல்லி"; "நகையும் உவகையும் கொல்லும் சினம்' என்பவை அவை. அச்சினம் சினந்தானைக் கொல்லுதல் உறுதி என்பாராய்த்,

46

“தன்னைத்தான் காக்கின் சினம்காக்க காவாக்கால் தன்னையே கொல்லும் சினம்”

என்றார். சினம் வெகுளி என்பவற்றை விளக்குகிறார் வள்ளலார்:

'சினம் என்பது யாது? உள்வேக்காடு, புடஞயாம் போல் து தேகத்தைச் சீக்கிரம் நஷ்டம் பண்ணும்.'

வெகுளி என்பது மீசை துடித்தல், கண் சிவத்தல், கை முதலிய உறுப்புகள் துடித்தல், வாய்குழறி மேல் விழுந்து கூவுதல்; இஃது ஆயுளை நஷ்டம் பண்ணும். ஆகையால் எவ்வகையிலும்