உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 34.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் வழியில் வள்ளலார்

51

கோபத்தின் பூர்வோத்திரமாகிய சினம் வெகுளி என்னும் கூற்றை ஒழித்தல் அவசியம்.'

வள்ளலார் சினம் வெகுளி என்பவற்றைக் கூற்று என்று சொல்வானேன். கூற்று கூறுபடுப்பது அல்லது கொல்வது என்னும் பொருள்தாம்.கூற்று என்பதை ஆண்பாலாக்கிக் காட்டியதே கூற்றுவன் என்பதாம். வள்ளுவர் 'கொல்வது' என்பதை வள்ளலார் 'கூற்று' என்கிறார் என்பது இதனால் தெளிவாம்.ஆயுளை நஷ்டம் பண்ணும் என்பதும் எண்ணத்

தக்கதே.

வாழ்வாங்கு வாழ்தல்

வாழும் நெறியில் வாழ்வார் வையகத்தில் வாழும் நாளிலேயே வானின்கண் உறையும் தெய்வமெனப் போற்றப்படுவார் என்பது திருவள்ளுவர் தேர்ச்சியுரை. இதனை,

“வையத்து வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும்”

என்னும் குறள் காட்டும்.

வள்ளலார்

வையகத்தில் வாழ்ந்து கொண்டிருந்த நாளிலேயே வணங்கத்தக்க பெருமகனாராக விளங்கினார். அவரைத் தெய்வமெனவே வழிபட்டாரும் உளர். இதனை அறிந்து அவரே கண்டித்து உரைத்ததும் வருந்தியுரைத்ததும் நாம் முன்னர் அறிந்தனவே. இறைவனை அவர் வள்ளலார் என வழங்க, அவரை வள்ளலார் என அவர்தம் அன்பரும் அடியரும் வழங்கியதும் அறிந்ததே. வள்ளலார் திருவுருவம் அவரை எதிரிட்டு நின்றாரும் எழுந்திருந்து ஏற்றம் தருமாறு இருந்த தெனின், அவரைக் கண்கண்ட கடவுளாகக் கொண்டவர்கள் வழிபட்டு வந்ததிலே வியப்பதற் குரியதில்லையே!

வள்ளலார், 'எவரிடம் கடவுள் உறைகிறார்' என்பதையும் எவரிடம் கடவுள் இருந்தும் இல்லாராகிறார் என்பதையும் தெளிவாக உரைக்கிறார். முன்னே அருட்கல்வியே சாவாக்கல்வி என்றும் மெய்ப்பொருட் கல்வி என்றும் கண்டதும் இவண் கருதத்தக்கதாம்.

"யாரிடத்தில்

தயவு

அதிகப்பட்டிருக்கின்றதோ அவரிடத்தில் கடவுள் இருக்கின்றார்" என்கிறார் வள்ளலார். மேலும், "அந்தத் தயையில்லாதவர்களிடத்துக் கடவுள் இருந்தும்