உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 34.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52

இளங்குமரனார் தமிழ்வளம் -34 ஓ

ல்லாமல் இருக்கிறார் என்று அக்கருத்தினை எதிர் நிலை கொண்டும் விளக்குகிறார்.

"எந்த ஜீவர்களிடத்தில் தயாவிருத்தியாகிய அருள் விசேஷம் விளங்குகின்றதோ, அந்த ஜீவர்களிடத்தில் கடவுள் விளக்கம் விசேஷமாயிருக்கும். மற்றவர்களிடத்தில் காரியம் படாது" என்றும் விளக்குகிறார்.

அருளே இறைமை என்றும் அருளுடையான் இறையுறை வாளன் என்றும் வள்ளலார் கூறுவது கொண்டு ஆய்ந்தால், ஒரு மண் கட்டி உடைவதற்கும் உருகி நின்ற வள்ளலார் அருள் நிலை சொல்லும் அளவினதன்றே! ஆதலின் வள்ளுவர் சொல்லுமாறு வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து தெய்வநிலை எய்திய திருவாளர் வள்ளலார் என்பது தெளிந்த உண்மையாம்.

66

இதற்கும் ஒருபடி மேலே சென்று வள்ளலாரை மதிப்பிடு கிறார் மெய்யுணர்வுப் பெருமாட்டி பிளாவட்சுகி அம்மையார். 'இராமலிங்கம் ஐயத்திற்கு இடமின்றி ஒரு பேரான்மாவே (மகாத்மாவே); அவர் உலகோர் அனைவரும் ஒரு பிறப்புரிமை யுடையவராய் விளங்குவதற்காகவே பணிசெய்து மாந்தரைத் தெய்வநிலைக்கு உயர்த்தும் பேரார்வத்துடன் வாழ்ந்திருக் கிறார் என்கிறார்.

இம்மதிப்புரையால் "மாந்தரைத் தெய்வநிலைக்கு ஏற்றும் தெய்வம் வள்ளலார்" என அம்மையார் கருதுதல் புலப்படும். உணர்ச்சி வாயில் உணர்வோர் வலித்தே' என்பது தொல்காப்பியம். எங்கோ பிறந்து வாழ்ந்த அவர் கண்டு கொண்ட காட்சி, இங்குளார்க்கு இதுகாறும் புலப்பட்டதாகச் செயன்முறையில் தோன்றுகின்றதா? தோன்றுகின்றதா? அவர் பெயரைச் சொல்லிக் கொள்ளும் அமைப்புகளிலேயே எத்தனை எத்தனை பிரிவுகள், பிளவுகள், உடைவுகள், உறாய்வுகள், முட்டல்கள், மோதல்கள்! ஆன்மநேய ஒருமைப்பாட்டுக் கொள்கை என்பதை மெய்யாக உணர்ந்தார் எனின் இவற்றுள் ஒன்றேனும் தலை காட்டுமோ? 'சொல்லால் முழக்கிச் சுகம் காண்பார்" எப்படிச் செயலுக்கு வருவர்?

இனி வள்ளுவர் வழியில் வள்ளலார் பாடல்கள் அமையும் திறத்தைக் காண்போம்.