உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 34.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. வள்ளலார் பாடல்களும் திருக்குறளும்

விண்ணப்பம்

முதல் திருமுறையுள் உள்ளது விண்ணப்பக் கலிவெண்பா. அதில் வரும் 413 ஆம் கண்ணியில் இறையே உன்மேல் அன்பு லேன் எனினும் அன்புடையனென ஒப்பாகக் காட்டித் திரிகின்றேன் என்னும் பொருளில்,

“இப்பாரில் உன்மேலன் பில்லெனினும் அன்பனென ஒப்பாரி யேனும் உடையான்காண்'

என்கிறார். இதில் உள்ள 'ஒப்பாரி' என்னும் சொல்லாட்சி,

“மக்களே போல்வர் கயவர் அவரன்ன ஒப்பாரி யாங்கண்ட தில்"

என்னும் வள்ளுவச் சொல் வழிப்பட்டதாம். பழந்தமிழ்ச் சொல்லடைவில் 'ஒப்பாரி' என்னும் ஆட்சி திருக்குறளில் மட்டுமே உண்டு என்பதும் பின்னுளோரும் அவ்வகையில் ஆண்டது அரிதே என்பதும் எண்ணத்தக்கன.

நெஞ்சறிவுறூஉ

நெஞ்சறிவுறுத்தலில் குறள் மணிகளை அப்படி அப்படியே அகழ்ந்து மணியெனப் பதித்துக் கொள்கிறார் வள்ளலார். இறைவனை வள்ளுவர் "வேண்டுதல் வேண்டாமை என்பார். வள்ளலார் "வேண்டாமை வேண்டுவது மேவாத" சித்தராகக் காண்கிறார் (62)

லான்

தம் நெஞ்சை விளித்து,

கூத்தாட் டவைசேர் குழாம்விளிந்தாற் போலுமென்ற சீர்த்தாட் குறண்மொழியும் தேர்ந்திலையே - பேர்த்தோடும்

நாட்கொல்லி என்றால் நடுங்குகின்றாய் நாளறியா

ஆட்கொல்லி என்பரிதை ஆய்ந்திலையே” (411, 412)