உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 34.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54

34ஓ

இளங்குமரனார் தமிழ்வளம் - 34

எனப் பாடுகிறார். இதில், திருக்குறளைச் 'சீர்த்தாள் குறள் என்கிறார். சீர்த்தாள் ஆவது சீரடி; சிறந்த அடிகளையுடைய குறள் என்பதாம்.

“கூத்தாட் டவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்

போக்கும் அதுவிளிந் தற்று” (332)

என்னும் குறளைக் குறித்தல் அறிக.

செல்வம் சேர்வது, கூத்தாட்டு நிகழ்ச்சி காண்பதற்கு ஒருவர் இருவராய் அவை கூடுவது போலச் சிறுகச் சிறுகச் சேர்வது எனவும், கூத்தாட்டு முடிந்த வேளையில் உடனே பெருந்திரளும் ஒருங்கே போவது போலச் செல்வம்போகும் வேளையில் ஒருங்கே போய்விடும் எனவும் சொல்லும் குறள் மொழியை நெஞ்சே! நீ ஆராயவில்லையே என அறிவுறுத்துகிறார்.

காலம் என்பது என்ன? நொடி நொடியாக அழித்துக் கொண்டு ஓடுவது; ஒவ்வொரு நாளையும் கொன்றழிப்பது; ப்படித்தான் அஞ்சச் செய்கிறது. ஆனால் உண்மையென்ன? ஆளைக் கொல்கிறது; நொடி நொடியும் கொன்று கொண்டே இருக்கிறது என்பதை ஆராயவில்லையே என்கிறார். இது,

"நாளென ஒன்றுபோற் காட்டி உயிரீரும் வாள(து) உணர்வார்ப் பெறின்"

என்னும் குறட்கருத்து என்பது வெளிப்படையே.

வெகுளாமை

வெகுளாமையில் வரும் இரு குறள்களைப் பயன்படுத்தும் வள்ளலார், அதற்கு மறுதலையான பொறையுடைமைக் குறள் ஒன்றனையும் இணைத்து ஓரிடத்து மும் மணிகளைப் பதித்ததெனப் பதிக்கிறார்.

"செல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும்

இல்லதனிற் றீயதென்ற தெண்ணிலையே - மல்லல் பெறத்

தன்னைத்தான் காக்கின் சினங்காக்க என்றதனைப் பொன்னைப்போற் போற்றிப் புகழ்ந்திலையே - துன்னி

அகழ்வாரைத் தாங்கும் நிலம் போல என்னும்

திகழ்வாய்மையுநீ தெளிவாய்" (433-435)

என்பவை அவை. இவை,