உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 34.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் வழியில் வள்ளலார்

"செல்லா இடத்துச் சீனந்தீது செல்லிடத்தும்

இல்லதனிற் றீய பிற’

""

"தன்னைத்தான் காக்கின் சினம்காக்க காவாக்கால் தன்னையே கொல்லும் சினம்'

'அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை

இகழ்வார்ப் பொறுத்தல் தலை”

55

என்னும் குறள்களாதல் அறிந்தவே (302,305,151) மூன்றாம் பாடல் குறிப்பில் 'திகழ்வாய்மை' எனத் திருக்குறளைக் குறித்தல் கண்டு மகிழத்தக்கதாம்.

கொல்லாமை

அறவினை யாதெனில் கொல்லாமை; ஒன்றாக நல்லது கொல்லாமை; நல்லாறெனப்படுவது யாதெனின் யாதொன்றும் கொல்லாமை சூழும் நெறி (321, 323, 324) என்பவற்றின் பிழிவாக வெளிப்பட்டது,

"எல்லா நலமும் இஃதேயென் றேத்துகின்ற

கொல்லா நலஞ் சிறிதும் கொண்டிலையே”

என்பதாம் (440)

வாய்மை

அகந்தூய்மையே வாய்மை என்பது திருக்குறள். அதனைப்

"புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை

வாய்மையாற் காணப் படும்" (298)

என்பார். வள்ளலார்,

66

'தூய்மையென்ப தெல்லாம் துணையா அணைவதுதான் வாய்மையென்ப தென்றே மதித்திலையே”

என்கிறார் (442)

நிலையாமை

நிலையாமை பற்றிக் கூறும் வள்ளுவர்,

“உறங்குவது போலும் சாக்கா டுறங்கி

விழிப்பது போலும் பிறப்பு”