உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 34.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56

என்றும்,

இளங்குமரனார் தமிழ்வளம் -34

"நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்

பெருமை யுடைத்திவ் வுலகு”

என்றும் கூறுகிறார். இதனை உட்கொண்ட வள்ளலார்,

உறங்குவது போலுமென்ற ஒண்குறளின் வாய்மை

மறங்கருதி அந்தோ மறந்தாய் - கறங்கின்

"நெருநல் உளனொருவன் என்னும் நெடுஞ்சொன் மருவும் குறட்பா மறந்தாய்’

.

என்று 'ஒண்குறள்', 'மருவுங் குறள்' எனப் பெருந்தக்க பெயர் சுட்டிப் பேருவகையோடு உரைக்கிறார் (466 - 467).

மெய்யுணர்தல்

“பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு" (350)

என்னும் சொற்பொருட்பின் வருநிலைக் குறளைக் கேளார் அரியர். அதனை அப்படி அப்படியே நூலாசிரியன்மாரும், உரையாசிரியன்மாரும் போற்றிக் கொண்டுளர். வள்ளலார்,

“பற்றற்றான் பற்றினையே பற்றியிடல் வேண்டுமது பற்றற்றால் அன்றிப் பலியாதால்'

என்கிறார் (624).

முதலும் நெய்யும்

இரண்டாம் திருமுறையில் பழமொழி மேல் வைத்துப் பரிவு கூர்தல் என்பதொரு பதிகம். அதன் ஒவ்வொரு பாடலின் தொடக்கமும் பழமையாய் வழங்கிவரும் தொடர் ஒன்றனைக் கொண்டு இயல்கின்றது. அப்பத்தில் இரண்டு பாடல்கள் திருக்குறளை முடியாகக் கொண்டுள.

"முதலிலாமல் ஊதியம் பெற விழையும் மூடனென்ன நின் மொய்கழற் பதமேத் துதலிலாது நின்னருள் பெற விழைந்தேன்”

என்பது,

""