உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 34.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் வழியில் வள்ளலார்

"முதலிலார்க்கு ஊதிய மில்லை மதலையாம்

சார்பிலார்க் கில்லை நிலை" (449)

என்னும் குறள் வழியது.

"நெய்யினாற் சுடு நெருப்பவிப்பவன்போல் நெடிய துன்பமாங் கொடியவை நிறைந்த பொய்யினாற் பாவம் போக்கிட நினைந்தேன்"

என்பது,

“நெய்யால்எரி நுதுப்பேம் என்றற்றால் கௌவையால் காமம் நுதுப்பேம் எனல்" (1148)

என்னும் குறள் வழியது.

57

இரண்டிடங்களிலும் திருக்குறளை மேற்கோளாகக் காண்டாலும், குறட் பொருளையே கொண்டார் அல்லர். அதனைத்தழுவித் தம் கருத்தை உரைத்துள்ளார் வள்ளலார்.

முதல் இல்லாதவர்க்கு அதனால் வரும் ஊதியம் இல்லை; அதுபோல் தம்மைத் தாங்கிக் காப்பாற்றும் துணை இல்லார்க்கு நிலைபேறு இல்லை என்பது முதற் குறளின் பொருள். இதனை, முதல் இல்லாதவர்க்கு அதனால் வரும் ஊதியம் இல்லை; எனினும் அதனையின்றியே ஊதியம் பெற விரும்பும் மூடனைப் போன்றுளேன்! இறைவனே, நின் திருவடியை வணங்குதலாம். முதல் இல்லாமலே நின் அருளாகிய ஊதியத்தைப் பெற விரும்புகிறேன் என்கிறார். பொருட் பொருளை, அருட் பாருளுக்கு அமைத்துக் கொண்டார் வள்ளலார் என்க.

இனி இரண்டாம் குறளும் அவ்வாறு பொருள் மாற்ற வகையிலேயே ஆளப்படுகின்றதாம்.

ஊரவர் பேச்சால் காமத்தை அவித்துவிடலாம் என்று நினைப்பது, நெய்யைத் தாராளமாக ஊற்றி, எரியும் நெருப்பை அணித்து விடலாம் என்பது போன்றதே என்பது குறளின் பொருள்.

காமத்தை அணைக்க எண்ணும் எண்ணத்தைப் பாவத்தை மறைக்க நினைக்கும் நினைவாக மாற்றியமைக்கிறார் வள்ளலார்.

நெய்யைக் கொண்டு, எரியும் நெருப்பை அணைக்க நினைப்பவன்போல் நெடுந்துயரும் கொடுமையும் நிறைந்த பொய்யைக் கொண்டு, பாவத்தை மறைக்க நினைந்தேன்