உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 34.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58

இளங்குமரனார் தமிழ்வளம் - 34 ஓ

என்கிறார். இவ்வீரிடத்தும் உவமையை வள்ளுவர் வழியில்

கையாண்டு, பொருளைத் தம்

கருத்துக்கு

ஆக்கிக்

கொள்கிறார் வள்ளலார்.

இரத்தலும் ஈதலே

"இரக்கின் றோர்களுக் கில்லையென் னார்பல் இரத்தல் ஈதலாம் எனலுணர்ந் திலையோ

கரக்கின் றோர்களைக் கனவினும் நினையேல்"

என்பது இரண்டாம் திருமுறையில் வரும் நெஞ்சைத் தேற்றல் பதிகத்தின் மூன்றாம் பாடல்.

t

'இல்லை என்று வந்தவர்க்கு இல்லை என்னாமல் ஈகின்றவரிடத்தே இரப்பது இரப்பதன்று; ஈதலுக்கு ஒப்பானது; இல்லை என்று வந்தவர்க்கு இல்லை என்பவரை இரக்கக் கனவில் கூட நினைத்தலும் ஆகாது" என்னும் இப்பொருளமைந்த திருக்குறள் 'இரவு' என்பதில் இடம்பெற்றுள்ளது.

“இரத்தலும் ஈதலே போலும் கரத்தல்

கனவினும் தேற்றாதார் மாட்டு”

GTGỒI LI GILD (1054).

விளக்கு

மேலோர் என்னும் சொல்லுக்கு முன்னோர் என்னும் பொருளும், மேன்மையோர் என்னும் பொருளும் உண்டு. திருவள்ளுவரை மேலோர் என்று வழங்கி வாய்மை விளக்கம் புரிகிறார் வள்ளலார்.

"மெய்விளக்கே விளக்கல்லால்

வேறுவிளக் கில்லையென்றார் மேலோர்"

என்பது அது.

tr

'எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப் பொய்யா விளக்கே விளக்கு" (299)

என்னும் திருக்குறளைக் கொண்டது இப்பாட்டு. இதுவும் இரண்டாம் திருமுறையைச் சார்ந்துள பாட்டே