உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 34.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்வி

வள்ளுவர் வழியில் வள்ளலார்

59

66

“கற்க கசடறக் கற்பவை கற்றபின்

நிற்க அதற்குத் தக” (391)

என்னும் குறள் எவராலும் அறியப்பட்டதே. அக்குறளில் கசடறக் கற்றல், கற்பவை கற்றல் என்பவற்றைப் பல இடங்களில் வலியுறுத்துகிறார்.

“கற்பவற்றைக் கல்லாக் கடையர்’

என்றும் (அருட்டிறத் தலைசல்)

.99

“கற்பன அறிந்து கற்கிலேன் சழக்குக் கல்விகற் றுழன்றனன்” என்றும் (ஆற்றா விண்ணப்பம்) வரும் இடங்களில் அறிக.

'கற்குமுறை கற்றறியேன் கற்பனகற் றறிந்த

கருத்தர்திருக் கூட்டத்திற் களித்திருக்க அறியேன்

நிற்குநிலை நின்றறியேன் நின்றாரின் நடித்தேன்'

99

என ஆறாந் திருமுறையிலும் வரும்; இவ்வாறு வருவன பல

என்க.

துச்சில்

துச்சில் என்பது வள்ளுவர் வழங்கும் அரிய சொல். புக்கில் என்பது மனையையும் துச்சில் என்பது அதன் ஒட்டுக் குடியிருப் பையும் குறிப்பது. உடலாகிய ஒட்டுக் குடி வாழ்வைக் குறிக்கத் துச்சில் வள்ளுவரால் பயன்படுத்தப்படுகிறது.

“புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள் துச்சில் இருந்த உயிர்க்கு”

என்பது அது. அதனைத்,

“துச்சிலை விரும்பித் துயர்கொளும் கொடியேன்" என ஆள்கிறார் வள்ளலார் (அபராதத்து ஆற்றாமை).

மெய்ப்பொருள்

"மெய்ப்பொருள் காண்ப தறிவு”

என இருமுறை அழுத்தினார் வள்ளுவர்.

"எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு"