உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 34.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60

34

இளங்குமரனார் தமிழ்வளம் - 34

எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்ப தறிவு.

என்பவை அவை.

வள்ளலார் அருட்பெருஞ்சோதி இறைவன் மெய்ப் பொருள்வடிவாக இருத்தலை விளக்குங்கால் இக்குறள்களை நினைவு கூர்ந்து சொல்கிறார்:

“எப்பொருள் மெய்ப்பொருள் என்பர் மெய் கண்டோர் அப்பொருள் ஆகிய அருட்பெருஞ்சோதி”

து அருட்பெருஞ்சோதி அகவலில் உள்ளது.

திருக்குறளுக்கு ஒரு பெயர் 'பொய்யாமொழி'; அதனை இயற்றிய வள்ளுவர்க்கு ஒரு பெயர் "பொய்யா மொழியார்" என்பது. அதனைக் கருதிய வள்ளலார் "மெய்கண்டோர்" என வள்ளுவர்க்குப் பெயர் பொறிக்கிறார். மெய்கண்டோர் கண்ட பொருள் மெய்ப்பொருள் என்பதை விளக்க வேண்டுவதில்லையே! 'மெய்கண்டார்' என்னும் சான்றோர் பெயர் தமிழர்க்குப் புதுவது அன்றே! முன்னே 'திகழ்வாய்மை' என்றதும் எண்ணுக.

எண்ணம்

“எண்ணிய எண்ணியாங் கெய்துப எண்ணியார் திண்ணியர் ஆகப் பெறின்”

என்னும் குறள் பெரிதும் அறியப்பட்டது. இதனை,

“எண்ணிய எண்ணியாங் கியற்றுக என்றெனை அண்ணியுள் ளோங்கும் அருட்பெருஞ் சோதி”

66

'எண்ணிய எண்ணியாங் கெய்திட எனக்குப் பண்ணிய தவத்தால் பழுத்தசெம் பொன்னே””

எண்ணிய எண்ணிய வெல்லாம் தரஎனுள் நண்ணிய புண்ணிய ஞானமெய்க் கனலே" என அருட்பெருஞ்சோதி அகவலினும்,

“எண்ணிய எண்ணங்கள் எல்லாம் - நான் எண்ணிய வாறே இனிதுதந் தென்னைத்

திண்ணிய னாக்கிற்றுப் பாரீர் - திருச் சிற்றம் பலத்தே திருநட சோதி”