உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 34.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் வழியில் வள்ளலார்

61

என ஆனந்தக் களிப்பிலும் பாடுகிறார் வள்ளலார். இக்கருத்து வேறுசில இடங்களிலும் இடம்பெற்றுளது.

பொறையுடைமை

'மண்ணைப்போல் பொறுமை" என்பது பெருவழக்கினது. இதனைத் திருவள்ளுவர்,

“அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை

இகழ்வார்ப் பொறுத்தல் தலை'

""

என்று, மண் அகழ்வாரைப் பொறுத்தலைக் காட்டி இகழ்வாரைப் பொறுத்தல் வேண்டும் என்று விளக்குகிறார். தாங்குதல் என்பதற்குப் பொறுத்தல் என்னும் பொருளுண்மை அறிக. இப்பொறையை, வள்ளலார், இறைமையின் பொறையாக்கி இயம்புவாராய்ப்

“பாரினும் பெரிதாம் பொறுமையோய் நீயே"

என்கிறார் (திருவடி முறையீடு 4). உவமையினும் பொருளுக்கு உயர்வு தருகிறார் வள்ளலார்; பாருக்கு மூலமாம் இறை பாரிற் சிறந்தது தானே! இதனைப் 'புவிக்கிங்கிசைத்திலை நீ, அகழ்ந்தார் தமையும் பொறுக்க வென அமைத்தாய் எல்லாம் அமைத்தாயே' என்றும் கூறுகிறார் (வாதனைக் கழிவு).

பொய்யாமை

“பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற செய்யாமை செய்யாமை நன்று” (297)

என்னும் வள்ளுவர்,

“பொய்மையும் வாய்மை இடத்த புரைதீர்ந்த நன்மை பயக்கும் எனின்” (292)

""

என்றும் கூறுகிறார். பொய்யுரைத்தலை ஏற்றுக்கொள்ள வள்ளுவர் உள்ளம் இடந்தராது. ஆனால் பிறவுயிர்க்கு நன்மையே செய்ய வேண்டும் என்பது வள்ளுவ அடிப்படை வாய்மை கூறுவதால் பிறஉயிர்க்குத் தீமை ஏற்படுமாயின் அவ்வேளையில் அவ்வாய்மை கூறுவதை விடுத்துப், பொய்மை கூறினால், அப்பொய்மை நன்மை விளைக்குமாயின் அவ்விடத்து மட்டும் கூறலாம் என்பதே அவர் உள்ளம். வரைகடந்து எவ்விடத்தும் எந்நிலையிலும் பொய் கூறலாம் எனல் பொய்யாமொழியார் பொருளுரை யன்றாம்.