உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 34.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62

இளங்குமரனார் தமிழ்வளம் - 34 ஓ

இந்நுட்பம் அறிந்தே வள்ளலார்,

“பொய்பிழை அனந்தம் புகல்கின்றேன் அதிலோர் புன்முனை ஆயினும் பிறர்க்கு

நைபிழை உளதேல் நவின்றிடேன்"

என்கிறார் (பிள்ளைச் சிறு விண்ணப்பம்). என்னெனினும் இது முழுதுறு வாய்மை யன்றே எனக் கருதும் வள்ளலார் இதற்குப் 'பொய்வாய்மை' எனப் புதுப்பெயர் தரக் கருதுகிறார் போலும்! அதனால், சுத்தசன்மார்க்க வேண்டுகோளில்,

"பொய்யாத வாய்மைகளே புகன்றிடுதல் வேண்டும் புகன்றபடி புகன்றபடி புரிந்திடுதல் வேண்டும்"

என்கிறார்.

"சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம், சொல்லிய வண்ணம் செயல்"

என்பதன்றோ குறள்!

அருளுடைமை

வள்ளுவர் அருளாளர்; வள்ளலார் அருட் பிழம்பு-வள்ளுவர் மன்னுயிர் ஓம்பி அருளாட்சி செய்தலையும் (244) உயிர்க்கு உறுகண் செய்யாமையையும் (216) பிறிதின் நோயைத் தன் நோயாகக் கருதித் தவிர்க்க முந்துதலையும் (315) குறிப்பார்.

அருள் வடிவாகிய வள்ளலார் அருளுடைமை தொடர் பாகப் பாடிய பாடல்களையெல்லாம் தொகுத்துக் காட்டுவதென நினைந்தால் அத்தொகுப்பே ஒரு பெருநூல் தொகுப்பாகிவிடும். அதனால் பிள்ளைச் சிறுவிண்ணப்பம். பிள்ளைப் பெரு விண்ணப்பம் என வரும் விண்ணப்பப் பகுதிகள் இரண்டிலும் வரும் சில குறிப்புகளை மட்டும் இவண் காணலாம்:

"உருவ! என் உயிர்தான் உயிர் இரக்கந்தான்

66

ஒன்றதே இரண்டிலை; இரக்கம்

ஒருவில் என் உயிரும் ஒருவும்"

என்னையும் இரக்கம் தன்னையும் ஒன்றாய்

இருக்கவே இசைவித் திவ்வுலகில்