உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 34.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் வழியில் வள்ளலார்

மன்னிவாழ் வுறவே வருவித்த கருணை

வள்ளல் நீ”

வை பிள்ளைப் பெருவிண்ணப்பம் சார்ந்தவை.

“எவ்வுயிர்த் திரளும் என்னுயிர் எனவே

எண்ணிநல் லின்புறச் செயவும் அவ்வுயிர் களுக்கு வருமிடை யூற்றை அகற்றியே அச்சநீக் கிடவும்”

"மண்ணுல கதிலே உயிர்கள் தாம்வருந்தும் வருத்தத்தை ஒருசிறி தெனினும் கண்ணுறப் பார்த்தும் செவியுறக் கேட்டும் கணமுநான் சகித்திட மாட்டேன்

எண்ணுறும் எனக்கே நின்னருள் வலத்தால் இசைத்தபோ திசைத்தபோ தெல்லாம் நண்ணுமவ் வருத்தம் தவிர்க்கநல் வரந்தான்

நல்குதல் எனக்கிச்சை எந்தாய்'

""

63

இவை பிள்ளைச் சிறு விண்ணப்பம் சார்ந்தவை. இவை வள்ளுவ வித்தில் இருந்து முளைத்துக் கிளைத்து விளைந்த நன்மணி விளைவேயாம்.

பொருளுடைமை

பொருள் என்பதன் சிறப்பைச் சொல்ல வேண்டுவதில்லை. 'பொருட்டு' என்னும் சொல்லே பொருளின் சிறப்பை நன்கு உணர்த்தும். பொருளையுடையது எது, அது பொருட்டு! அதுவே உலகோரால் பொருட்டாகவும் எண்ணப்படுகின்றது என்பதாம்."என்னைப் பொருட்டாக எண்ணவில்லை" என்று எத்தனை பேர் குறை சொல்லி நொந்து கொள்ளக் காண்கிறோம்! இதனால்தானே வாழ்வியல் அறிந்த வள்ளுவப் பெருந்தகை,

“பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும் பொருளல்ல தில்லை பொருள்"

என்றார். அவரே அதற்கு மேலும் சென்று,

“பொருளில்லார்க் கிவ்வுலகம் இல்லை"

என்றும் கூறினார்.