உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 34.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64

34ஓ

இளங்குமரனார் தமிழ்வளம் -34

வள்ளுவர் கருத்தைத் தம் வாக்கிலே எடுத்துக் கூறும் வள்ளலார், அப் பொருளுலகைத் தாம் எவ்வாறு பொருட்டாக எண்ணாமல் ஒதுக்கினார் என்பதை வெளிப்படுத்துகிறார்.

"பொருளிலே உலகம் இருப்ப தாதலினால் புரிந்துநாம் ஒருவர்பாற் பலகால் மருவினால் பொருளில் இச்சையாற் பலகால் மருவு கின் றானெனக் கருதி

வெருவுவர் எனநான் அஞ்சியெவ் விடத்தும் மேவிலேன் எந்தைநீ அறிவாய்

ஒருவுமப் பொருளை நினைத்தபோ தெல்லாம் உவட்டினேன் இதுவும்நீ அறிவாய்”

என்கிறார் (பிள்ளைப் பெரு விண்ணப்பம்).

இதில் "பொருளிலே உலகம் இருப்பது" என்பது வள்ளுவர் வாய்மொழி எனக் கொள்ளத் தக்கதே என்க.

பற்றறுத்தல்

துன்ப நீக்கம் வேண்டுமா? துன்பம் நெருங்கான் துணையை நாடுதல் வேண்டும். இன்ப ஆக்கம் வேண்டுமா? இன்பமே பொருளாய் இருப்பான் துணையா அடைதல் வேண்டும்! இன்ப துன்பங்களுக்கு இருப்பாக இருப்பவன் துணையைக் கொண்டு, இன்ப துன்ப நீக்கம் பெறுதல் கூடுவது இல்லை. இத்தனை விளக்கு முகமாகவே வள்ளுவர்,

C

"வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல"

என்றார். இதனைத் தெளிந்த வள்ளலார்,

"எம்மான் நான் வேண்டுதல் வேண்டாமை யுறல் வேண்டும்" என்று வேண்டுதல் வேண்டாமை இலானிடம் வேண்டுகோள் விடுக்கிறார். இது சுத்த சன்மார்க்க வேண்டுகோள்.

ஒத்த தறிதல்

ஒத்த தறிதலை முன்னரும் கண்டுளோம். அதனை ஆன்ம தரிசனத்தில் 'ஒன்றெனக் காணும் உணர்ச்சி" என்கிறார் வள்ளலார். ஒத்த தறியாரை "ஒருமையிலர்" என்றும் கூறுகிறார் (சித்தி விளைவு).இன்னும் இவ்வருளியற் கொள்கை பொருளியல்