உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 34.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் வழியில் வள்ளலார்

65

உலகியல் ஆகியவற்றிலும் விளங்க வேண்டும் என்றும் வேட்கை யுடையவராய்,

"ஒத்தாரும் உயர்ந்தாரும் தாழ்ந்தாரும் எவரும்

ஒருமை யுளராகி யுலகியல் நடத்தல் வேண்டும்"

என்கிறார் (சுத்த சன்மார்க்க வேண்டுகோள்). 'எவ்வுயிரும் ன்பமடைதல் வேண்டும்" என்பவர் வேறு எப்படிக் கூற முடியும்?

எவ்வுயிரும் தம்முயிர் போற் காணல், எவ்வுயிரும் பொது வெனக் கண்டிரங்கல் என்பவற்றைக் கொண்ட வள்ளலார், "எத்துணையும் பேதமுறை தெவ்வுயிரும் தம்முயிர்

போல் எண்ணி யுள்ளே

ஒத்துரிமை யுடையவராய் உவக்கின்றார் யாவரவர்

உளந்தான் சுத்த

சித்துருவாய் எம்பெருமான் நடம்புரியும் இடமென

நான் தேர்ந்தேன் அந்த

வித்தகர்தம் அடிக்கேவல் புரிந்திடவென் சிந்தைமிக

விழைந்த தாலோ”

என்று கூறுகிறார். இதில் அவர் ஒத்துரிமை யுடையாரை இறைமையாகக் கண்டு, அவரை வழிபடக் கருதும் தம் விருப்பை உரைக்கிறார் அல்லரோ! மேலும் அவர்,

“ஒருமையின் உலகெலாம் ஓங்குக எனவே

ஊதின சின்னங்கள்! ஊதின சங்கம்!”

என்று இசை எழுப்பிச் சின்னம் பிடிக்கின்றாரே வள்ளலார்! அவர் ஒத்துரிமையிலே கொண்ட உவகைப் பெருக்கன்றோ இச்சின்ன முழக்கம்!

பிறப் பொருமை

வள்ளுவப் பேராசான் மெய்யுணர் மணிகளுள் மேதக்க மணி ஒன்று "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்பது. இம்மணி தோன்றிய நாளில் இருந்து இதுகாறும் நிகழ்ந்து கிடக்கும் வரலாற்று நோக்கில் இஃது ஆயப்படுமானால்

எத்துணைப் பன்னூறு மடங்கு பொலிவுடையதாகத்

திகழ்கின்றது!